வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

காமராஜர், அம்பேத்கார் வரிசையில் தென்னிந்திய ஜான்சி ராணி.. தவெக மாநாட்டில் கவனம் பெறும் பேனர்

TVK : நாளை மிகுந்த எதிர்பார்ப்பில் பலரும் காத்திருக்கின்றனர். அதாவது விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் தனது முதல் மாநாட்டை நாளை நடத்த இருக்கிறார். அதாவது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சாலையில் இந்த மாநாடு நடக்க உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் வித்தியாசமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தவெக மாநாட்டில் அரசியல் தலைவர்கள் காமராஜர், அம்பேத்கர், பெரியார், போன்றவர்களின் பேனர்கள் வைத்துள்ளனர்.

அதில் இப்போது காந்தியால் ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்ட அஞ்சலை அம்மாள் பேனர் வைத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த இவர் ஆங்கிலேயரின் அடக்கு முறையை பற்றி அறிந்தவர்.

தவெக கட்சியின் மாநாட்டில் பங்குபெறும் முக்கிய பேனர்

tvk-vijay
tvk-vijay

அதோடு சுதந்திரப் போராட்டத்தில் இவரது பங்கு பெரிது. மேலும் சுதந்திர போராட்ட தியாகியாக கிட்டத்தட்ட 4 1/2 வருடம் சிறையிலேயே இருந்தார். அவரது கடைசி குழந்தையே சிறையில் தான் பெற்றெடுத்திருந்தார்.

பெண்ணின் தைரியம் மற்றும் ஆளுமைக்கான அடையாளமாக வாழ்ந்த அஞ்சலை அம்மாவின் போஸ்டர் விஜய்யின் கட்சியின் மாநாட்டில் இடம்பெற்று இருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதேபோல் மற்றொரு சுதந்திரப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாரின் புகைப்படமும் இதில் இடம் பெற்று இருக்கிறது.

நாளை பிரம்மாண்டமாக நடக்க உள்ள இந்த மாநாட்டில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இதில் பல சிறப்பு அம்சங்களும் இடம்பெற இருக்கிறது. ஆகையால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் நாளைக்கு இந்த மாநாட்டை காண காத்திருக்கின்றனர்.

Trending News