வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் டிவியிலிருந்து வெளியேற இதுதான் முக்கிய காரணம்.. உங்க சங்கார்த்தமே வேண்டாம் என தெரிந்து ஓடிய DD

Vijay Tv DD: விஜய் டிவியில் பல வருடங்களாக பயணித்து வந்தவர்தான் தொகுப்பாளினி டிடி. திவ்யதர்ஷினி என்ற நிஜப் பெயரை கொண்ட இவர் ரசிகர்களால் டிடி என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவருடைய கலகலப்பான கலந்துரையாடல் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்தது. மிகச் சின்ன வயதிலேயே தொகுப்பாளினியாக டிடி அறிமுகமாகிவிட்டார்.

அதோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்களில் நடித்த டிடி வெள்ளித்திரைகளும் சில படங்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியின் தத்துப்பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு டிடி பல வருடங்களாக அங்கேயே பணியாற்றி வந்தார். மேலும் இவர் அந்த தொலைக்காட்சிகளில் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியை இல்லை என்று சொல்லலாம்.

Also Read : எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

மேலும் டிடி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்றால் அதுதான் டிஆர்பியில் அதிகமாக இருக்கும். டாப் நடிகர்கள் முதல் எல்லோரையும் கலகலப்பான கேள்விகள் மூலம் நிகழ்ச்சியை அழகாக எடுத்துச் செல்வார். குறிப்பாக காபி வித் டிடி இவரது விருப்பமான நிகழ்ச்சியாகும்.

ஆனால் சில வருடங்களாக விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய நடிகர்களின் ஆடியோ லான்ச் விழாக்களில் டிடியை பார்க்க முடியவில்லை. இதற்கான காரணத்தை சமீபத்திய ஊடகப் பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது திருமணமான ஒரு வருடத்திலேயே டிடி விவாகரத்து பெற்று விட்டார்.

Also Read : 8000 பேர் உயிரைக் காப்பாற்றும் விஜய் டிவி பிரபலம்.. இதுவும் ஒருவிதமான போதை தான்

மேலும் அவரது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் உடல் நிலையிலும் பிரச்சனை ஏற்பட்டது. சமந்தாவுக்கு உள்ள பிரச்சனை போல் டிடி இதே நோயால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதற்கான சிகிச்சையையும் தற்போது மேற்கொண்டு வருகிறார். டிடியால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது.

சமீபகாலமாக அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் ஸ்டிக் வைத்து தான் கலந்து கொள்கிறார். மேலும் தொகுப்பாளர் என்றால் நிச்சயம் பல மணி நேரம் நின்று தான் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். ஆகையால் உங்கள் சங்கார்த்தமே வேண்டாம் என்று தொகுப்பாளனியாக எந்த நிகழ்ச்சியிலும் டிடி கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.

Also Read : புகழை கைது செய்ய வந்த போலீஸ்.. விஜய் டிவி அரங்கத்தில் நடந்த சர்ச்சை சம்பவம்

Trending News