புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பெரிய ஹீரோக்களுக்கு கொக்கி போடும் கமல்.. ரஜினியை அடுத்து இவர் எடுக்கும் முக்கிய முடிவு

உலகநாயகன் கமலஹாசன் நடிப்புக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. இந்நிலையில் கமலஹாசன் கடந்த தேர்தலின் போது முழு நேரமாக அரசியல்வாதியாக மாறினார். மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் தொடங்கி தொடர்ந்து பிரச்சாரம், பொதுக்கூட்டம் என கலந்து கொண்டு வந்தார். இதனால் கமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் அவரது படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கமலுக்கு அரசியல் கைகொடுக்கவில்லை. அரசியலுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்த விட்டு மீண்டும் சினிமாவில் முழு வீச்சாக இறங்கியுள்ளார். சில வருடங்களாக கிடப்பில் இருந்த விக்ரம் படத்தை தற்போது முடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் கமல் தற்போது வரிசையாக பல படங்களில் நடிக்கவும், தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தையும் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்துள்ளது.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தை கமல் தயாரிக்கிறார். இந்நிலையில் நிறைய இயக்குனர்கள் கமலை வந்து சந்தித்து தனது படங்களை தயாரிக்குமாறு கதை சொல்லி வருகின்றனர்.

தற்போது தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருக்கும் விஜய்யின் படத்தை இயக்க கமலஹாசன் ஆசைபட்டுள்ளார். அதேபோல் தளபதி 67 ஆவது படத்தை கமல் தயாரிக்கயுள்ளார் என்ற செய்தி நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து சூர்யா, அஜித் என பெரிய நடிகர்களின் படத்தை அடுத்தடுத்து தயாரிக்க கமலஹாசன் திட்டமிட்டுயுள்ளார்.

அரசியலில் இழந்ததை எப்படியாவது சினிமாவில் சம்பாதித்து விட வேண்டும் என்ற நோக்கில் பெரிய நடிகர்களின் படங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அதற்கான முழு மூச்சில் இறங்கி வேலை செய்துவருகிறார் கமல். எப்படி ரஜினி அரசியலை விட்டு விலகி சென்றாரோ அதேபோல் கமலும் இன்னும் சில நாட்களில் விலகி விடுவார் என்று கூறிவருகிறது கோலிவுட் வட்டாரங்கள்.

Trending News