தொடர்ந்து சரியும் நயன்தாராவின் மார்க்கெட்.. விக்கியால் சினிமாவுக்கு முழுக்கு போடும் நிலை

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் நயன்தாரா தற்போது பாலிவுட்டிலும் கால் பதிக்க இருக்கிறார். இப்படி பல வருடங்களாக நம்பர் ஒன் என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தன் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

பொதுவாக முன்னணியில் இருக்கும் நடிகை ஒருவர் திருமணம் செய்து விட்டால் அவருடன் ஜோடி போட்டு நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் தயங்குவார்கள். ஏனென்றால் திருமணம் ஆன ஹீரோயினுக்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு கிடைக்காது என்பதுதான் தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி.

Also read : ஒரே கேரக்டரால் விட்ட இடத்தை பிடித்த நடிகை.. நயன்தாராவுக்கு வந்த புது சிக்கல்

அதனாலேயே பல ஹீரோயின்கள் 40 வயதை கடந்தும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் விதிவிலக்காக சில ஹீரோயின்கள் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானதும் உண்டு.

அப்படி ஒரு முடிவை தான் தற்போது நயன்தாராவும் எடுக்க இருக்கிறாராம். இது அவர் விருப்பப்பட்டு எடுத்த முடிவு கிடையாது. வேறு வழியில்லாமல் தான் இப்படி ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறாராம். திருமணத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

Also read : காதல் கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா.. களைக்கட்டிய விக்கியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

அதிலும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதில் தனக்கு எப்படியும் ஹீரோயின் சான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நயன்தாராவுக்கு அடிச் அதிர்ச்சி தான் கிடைத்துள்ளது. ஏனென்றால் அந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வேறு ஒரு ஹீரோயினை புக் செய்ய இருக்கிறார்களாம்.

இப்படி தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஹிந்தி படமும் பாதியிலேயே நிற்கிறது. இப்படி எல்லா பக்கமும் சோதனைகள் வந்து கொண்டிருப்பதால் டீசன்டாக சினிமாவுக்கு குட் பை சொல்லிவிடலாம் என்ற முடிவில் அவர் இருக்கிறாராம். தற்போது கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து விலக ஆரம்பித்து விடுவார் என்கிறது சினிமா வட்டாரம்.

Also read : நயன்தாரா இடத்தை பிடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட கண்டிஷன்.. இப்படியே போனால் ஹீரோக்களின் நிலைமை