வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வசூலில் ரஜினியை தோற்கடித்த 2 ஜாம்பவான்கள்.. கூட்டணி சேர்ந்ததால் பதட்டத்தில் திரையுலகம்

Actor Rajini: தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் வசூல் மன்னன் என்றால் அது ரஜினி மற்றும் விஜய் தான். இவர்களது படங்கள் தான் வசூலில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு வெளியான இரண்டு படங்கள் ரஜினியின் முந்தைய வசூல் சாதனையை தோற்கடித்து விட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் அந்த படங்கள் பாராட்டைப் பெற்றது.

மேலும் அந்த இரண்டு ஜாம்பவான்களும் தனித்தனியாக வசூல் வேட்டை ஆடிய நிலையில் இப்போது புதிய படத்தில் ஒன்றாக இணைந்துள்ளார்கள். ஆகையால் இவர்கள் இருவரும் வைத்துள்ள சாதனை இந்த படத்தின் மூலம் தவிடு பொடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் தமிழ் திரையுலகம் இதனால் பதட்டத்தில் உள்ளது.

Also Read : ரஜினி முகத்தில் காரி துப்பிய பாரதிராஜா.. சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு

அதாவது கமலின் கேரியரிலேயே அதிக வசூல் சாதனை படைத்த படமாக மாறியது விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் ரஜினியின் முந்தைய பட சாதனைகளை முறியடித்து இப்படம் 420 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

அதேபோல் இந்த படத்திற்கு அடுத்ததாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது. மேலும் திரையரங்குகளில் அதிக நாள் ஓடிய இப்படம் கிட்டத்தட்ட 500 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. இந்தப் படங்களை பற்றி தவறான வசூல் விபரங்கள் மற்றும் போஸ்டர்கள் எதுவும் வெளியாகவில்லை.

Also Read : பொதுவெளியில் ரஜினியை மோசமாக பேசிய 5 பிரபலங்கள்.. குழந்தை மாதிரி என பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட சூப்பர் ஸ்டார்

பெரும்பாலான ரசிகர்கள் நேர்மையான விமர்சனங்களை மட்டுமே கொடுத்திருந்தனர். இந்நிலையில் கமல் மற்றும் மணிரத்தினம் இருவரும் ஒன்றாக புதிய படத்தில் இணைய உள்ளனர். விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் மூலம் இவர்கள் இருவரும் தனித்தனியாக வசூல் சாதனை படைத்திருக்கின்றனர்.

மேலும் நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து மணிரத்தினம் மற்றும் கமல் இணைந்துள்ளதால் கண்டிப்பாக படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் புதிய சாதனையை இந்த படம் உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

Also Read : குட்டிப் பகை ஆடு உறவா.? குடும்ப சண்டை, ரஜினியை விட்டுக் கொடுக்காத மருமகன்.. உச்சி குளிர்ந்து போன சூப்பர் ஸ்டார்

Trending News