Lal Salaam Review: இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் இந்த படத்தில் கௌரவ வேடத்தில் வருகிறார் என்று தான் முதலில் சொல்லப்பட்டது. ஆனால் படத்தை பார்த்த பிறகு தான் உண்மையிலேயே அவரைச் சுற்றி தான் படம் இருக்கிறது என தெரிகிறது. அப்பாவின் பெயரை முழுதாக காப்பாற்றி இருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
3 மற்றும் வை ராஜா வை படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கி இருந்தார். நடிகர் தனுஷ் உடன் ஆன விவாகரத்துக்கு பிறகு மீண்டும் படம் தயாரிக்க இருப்பதாக மூன்று ஆண்டுகள் கழித்து களத்தில் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே 3 மற்றும் வை ராஜா வை படங்கள் பெரிய அளவில் மக்கள் மனதை கவராததால் இந்த படத்தில் என்ன செய்யப் போகிறாரோ, ரஜினியை அசிங்கப்படுத்தி விடுவாரோ என பலருக்கும் பயம் இருந்தது.
ரஜினிகாந்திற்கு வெயிட்டான ஒரு கேரக்டர் கொடுத்து அவர் பெயரை காப்பாற்றி விட்டார் என்று நினைக்க கூடாது, ரஜினி நடித்ததால் தான் இந்த படமே இப்போது காப்பாற்றப்பட்டு இருக்கிறது. விளையாட்டு, மத நல்லிணக்கம், விளையாட்டில் நடத்தப்படும் அரசியல் போன்றவற்றை தைரியமாக எடுத்துச் சொன்னார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதை ஒரு கோர்வையாக சொல்ல தெரியவில்லை என்பது பலரது விமர்சனமாக இருக்கிறது.
Also Read:என்னது இத்தனை கேமியோ ரோல் படங்களா.! லால் சலாமுக்கு முன்னாடியே தலைவர் செய்த தரமான சம்பவம்
படத்தின் இரண்டாம் பாதியில் ரொம்பவும் போர் அடித்ததாக படத்தை பார்த்தவர்கள் விமர்சித்து இருக்கிறார்கள். அதே போன்று நடிகர்கள் செந்தில் மற்றும் தம்பி ராமையாவை சுற்றி வரும் எமோஷனல் காட்சிகள் அந்த அளவுக்கு எடுபடாமல் போய்விட்டது. இரண்டாம் பாதியில் ஒரு சீனுக்கும் அடுத்து வரும் சீனுக்கும் இடையே அந்த அளவுக்கு தொடர்பு இல்லாதது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்னும் கத்துக்க வேண்டிய விஷயம்
லால் சலாம் படத்தில் ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்குகள் எல்லாமே ஏற்கனவே கேட்டது தான். இருந்தாலும் ரஜினி தன்னுடைய ஸ்டைலில் சொல்லும்போது கேட்பதற்கு நன்றாக இருந்ததாக விமர்சனங்கள் சொல்கிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு லால் சலாம் படம் என்று இல்லை, 3 படத்திலும் இது போன்ற விஷயங்களில் தான் மொத்தமாக சொதப்பினார். அந்த படம் முதல் பாதியில் இருந்ததன் போக்கிலேயே இருந்திருந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும்.
ஒரு நல்ல காதல் கதையை இயக்கி அதை சம்பந்தமே இல்லாமல் ஹீரோவை மனநோயாளியாக காட்டி, தற்கொலை வரை சென்றதால் தான் இந்த படம் பெயிலியர் ஆனது. அதேபோன்று அந்த படத்தில் பிரபு, பானுப்ரியா, ரோகிணி போன்ற பெரிய ஆர்ட்டிஸ்களை நடிக்க வைத்து அவர்களுக்கு கேரக்டரே இல்லாதது போல் ஆகி இருப்பார். நன்றாக கதையை எடுத்துச் செல்லும்போது அதில் வரும் ட்விஸ்ட், கிளைமாக்ஸ் மற்றும் பெரிய நடிகர்களை எப்படி உபயோகப்படுத்துவது என்பதில் ஐஸ்வர்யாவுக்கு இன்னும் தெளிவு வரவில்லை என விமர்சனங்கள் சொல்கின்றன.
Also Read:முதல் நாளே பல் இளிக்கும் தியேட்டர்கள்.. சூடு பிடிக்குமா லால் சலாம்.?