திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Bhakkiyalakshmi: கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்ன எப்படி கோபி அங்கிள்.. சக்காளத்தி பிடிவாதத்தால் கெட் அவுட் சொன்ன பாக்கியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை பாக்கியா மூலம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதனால் நோகாமல் நொங்கு சாப்பிட ஆசைப்பட்ட கோபிக்கு பிள்ளைகள் முன்னாடி பெருத்த அவமானமாக போய்விட்டது. யாருடைய முகத்தையும் பார்க்க முடியாமல் அவமானத்தில் கூனிக்குறுகி அசிங்கப்பட்டு விட்டார்.

ஆனாலும் அந்த திமிர் மட்டும் கொஞ்சம் கூட குறையாமல் பாக்யாவிடம் உன்னை யாராவது சொல்வதற்கு கூப்பிட்டார்களா என்று ஏளனமாக கேட்கிறார். உடனே பாக்கியா என்னுடைய பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பது எனக்கு பிடிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியமான வேலைகள் என்று பல இருக்கிறது. அதனால் தான் அவர்களுக்காக நான் வந்து சொன்னேன் என்று கோபி மூஞ்சியில் பளார் என்று அடிக்கும் விதமாக நச்சென்று கூறிவிட்டார்.

அதிலும் கோபி அப்பாவிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் ஈஸ்வரிடம் உனக்குத் தெரிந்தும் என்னிடம் மறைத்து இருக்கிறாய் என்று கோபப்படுகிறார். இதையெல்லாம் கேள்விப்பட்ட ஜெனி ஒன்னும் சொல்லாமல் மாடிக்கு போய் விடுகிறார். இவரை சமாதானப்படுத்துவதற்காக செழியனும் பின்னாடியே போயி ஜெனி இடம் பேசுகிறார்.

பாக்கியா எடுத்த அதிரடி முடிவு

அதற்கு ஜெனி, மாலினிக்கு ஏதாவது குழந்தை இருக்கிறதா? அவளும் நாளைக்கு கர்ப்பம் என்று வந்து நின்றால் என்ன ஆகும் செழியாய் என்று சந்தேகத்துடன் கேட்கிறார். உடனே செழியன் அப்படியெல்லாம் கிடையாது. நான் அந்த அளவிற்கு மோசமானவன் இல்லை என்னை நம்பு என்று ஜெனி இடம் கெஞ்சுகிறார்.

இன்னொரு பக்கம் இனியா, கோபியின் செயல்களை நினைத்து அழுகிறார். இவரை சமாதானப்படுத்தும் விதமாக பாக்கியா வந்து பேசி உனக்கு நாங்க எல்லாம் இருக்கிறோம். நீ தேவை இல்லாமல் எதை பற்றியும் கவலை படாத. உன்னுடைய கவனம் அனைத்தும் படிப்பில் மட்டும் இருக்கணும். அதுதான் உனக்கு வாழ்க்கையில் கைகொடுக்கும் என்று ஊக்குவித்து பேசுகிறார்.

இதனைத் தொடர்ந்து செழியன் சோகத்தில் மாடிக்கு போயி எழிலிடம் பேசுகிறார். பிறகு இருவரும் சேர்ந்து கவலைகளை மறக்கடிக்கும் விதமாக அவர்களுக்கு மருந்தாக இருக்கும் மதுவை அருந்துகிறார்கள். அப்பொழுது ஜெனி என்னை சந்தேகப்பட்டு உனக்கு மாலினிக்கும் இதே மாதிரி ஏதாவது இருக்கா என்று கேட்கிறார் என செழியன் சொல்கிறார்.

உடனே எழில் அவரை மாதிரி யாரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது. தன்னுடைய சந்தோஷம் மட்டும்தான் முக்கியம் என்று நினைக்கக்கூடிய அவர் இனி இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்று இருவரும் பேசிக் கொள்கிறார்கள். இதனை தொடர்ந்து செழியன் எழில் இருவரும் சேர்ந்து கோபியை வீட்டை விட்டு அனுப்புவதற்கு முடிவெடுத்து விட்டார்கள்.

ஆனால் நான் ஏன் போக வேண்டும் என்று தெனாவட்டாக பேசும் கோபிக்கு பாக்யா மற்றும் ஈஸ்வரி இருவரும் சேர்ந்து பதில் அடி கொடுத்து கெட் அவுட் சொல்லி அனுப்பப் போகிறார்கள். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைப்பட்டால் இப்படித்தான் நடக்கும் கோபி அங்கிள். ஆனால் இவ்வளவு நடந்தும் ராதிகா எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறார்.

தற்போது ஈஸ்வரியும், கோபி இடம் நான் அன்னைக்கு சொன்ன மாதிரி ராதிகா கர்ப்பத்தை கலச்சிருந்தால் இந்த அளவுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்குமா என்று கோபியிடம் கேட்கிறார். எதற்கும் பதில் சொல்ல முடியாத கோபி திருதிருவென்று முழித்து கொண்டிருக்கிறார்.

கடைசியில் கோபி மற்றும் ராதிகா வீட்டை விட்டு போகப் போகிறார்கள். ஆனாலும் வளைகாப்பு மற்றும் குழந்தை பிறக்கும் பொழுது இந்த குடும்பம் மறுபடியும் அவர்களை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து பணிவிடை செய்யும்.

Trending News