Monalisa : உத்திர பிரதேசம் மாநிலம் கும்பமேளாவில் மோனலிசா என்ற பெண் ஊசி, பாசி மாலைகளை விற்று வந்தார். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உலக அளவில் ட்ரெண்டானார்.
இவ்வளவு பிரபலம் கிடைத்தும் அதனால் எந்த பயனும் இல்லை என்று மோனலிசா கூறினார். ஆனால் அதன் பிறகு கடை திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மோனலிசாவை அழைத்திருந்தனர்.
அப்போது பெரிய நடிகருக்கு உள்ள கூட்டம் இவருக்கு வந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இந்த சூழலில் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தனது படத்தில் மோனலிசாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார்.
முடிவுக்கு வந்த மோனலிசாவின் கனவு
இதனால் தன்னுடைய நெருங்கிய வட்டாரம் மற்றும் சினிமா பிரபலங்களிடம் மோனலிசாவை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளும் போய்க்கொண்டிருந்தது.
இந்த சூழலில் சினிமா வாய்ப்புக்காக வந்த நடிகை ஒருவரிடம் சனோஜ் மித்ரா எல்லை மீறி நடந்து கொண்டதாக வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவே வாடிக்கையாக இருந்த நிலையில் மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ளார்.
இதனால் மோனலிசாவின் சினிமா கனவு அஸ்தமனம் ஆகிவிட்டது. இப்போது அழுது கொண்டே தனது சொந்த ஊருக்கு மோனலிசா திரும்பி விட்டார். அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.