செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தலைகால் புரியாமல் ஆடும் சந்தியாவிற்கு செக் வைத்த மாமியார்.. லாஜிக்கே இல்ல ஊத்தி மூடுங்கபா!

விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் சிறுவயதில் இருந்தே ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் சந்தியா, அதற்கான தேர்வு எழுதி தற்போது அதில் தேர்ச்சி அடைந்ததாக அவருடைய வீட்டுக்கு கடிதம் ஒன்று வருகிறது. இதன்பிறகு முதல் கட்டத்தை தாண்டி விட்டதாக சந்தியா தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் ஆடுகிறார்.

இதற்காக அவர் சென்னைக்கு சில மாதங்கள் ட்ரெய்னிங் போக வேண்டும் என அவருடைய மாமியார் சிவகாமியிடம் அதற்காக அனுமதி கேட்கிறார். எப்பொழுதும் போலவே சிவகாமியும் ஒரு கண்டிஷன் போடுகிறார்.

Also Read: புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் விஜய் டிவி.. சன் டிவியை ஒழித்து கட்ட பக்கா பிளான்

அதாவது வீட்டில் தொலைந்துபோன 5 லட்சத்தை யார் எடுத்தது என கண்டுபிடித்த பிறகு, நீ ட்ரெய்னிங் போகலாம் என்று சந்தியாவிற்கு சிவகாமி செக் வைக்கிறார். அந்தப் பணத்தை ஆதி தான் திருடி இருக்கிறார். பல மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தப் பிரச்சனையை மறக்காமல் மறுபடியும் கிளருகிறார்களே என ஆதி பதட்டம் அடைகிறார்.

பல போராட்டங்களுக்கு பிறகு தற்போதுதான் ஆதி-ஜெஸி இருவருக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், ஆதி சொந்த வீட்டிலேயே 5 லட்சத்தை திருடி இருக்கிறார் எனத் தெரிந்தால் நிச்சயம் கல்யாணத்தை நிறுத்திவிடுவார்.

Also Read: விஜய் டிவியை தூக்கி எறிந்த சீரியல் நடிகை.. ஜீ தமிழும் கைவிட்ட பரிதாபம்

இப்படி கதை கிடைக்காமல் முன்பு நடந்த பிரச்சினையையும், லாஜிக்கே இல்லாத சில விஷயங்களையும் ராஜா ராணி 2 சீரியலில் செய்துகொண்டிருக்கும் சீரியல் இயக்குனரை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் கிழித்து தொங்க விடுகின்றனர்.

மேலும் இந்த காலத்தில் யாருக்கு ஐபிஎஸ் பரீட்சையில் தேர்ச்சி அடைந்ததால் கடிதம் மூலமாக அதுவும் தமிழில் லெட்டர் வருகிறது. அப்படியிருக்கும்போது சந்தியாவிற்கு மட்டும் ஐபிஎஸ் பரிட்சையில் பாஸ் ஆகி விட்டதாகவும் அதன் பிறகு அதற்கு ட்ரெயினிங் வர சொல்லியும் கடிதம் வந்திருப்பது கொஞ்சம் கூட இந்த காலத்திற்கு அப்டேட் ஆகாத சீரியலை ஊத்தி மூடுங்கபா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: ரொமான்ஸில் பின்னி பெடலெடுக்கும் ராஜா ராணி 2.. படங்களை மிஞ்சும் முத்தங்கள் ?

Trending News