வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஜெயம் ரவியை ஆட்டிப்படைக்கும் மாமியாரின் ராசி.. தொடர் தோல்விக்கு இது தான் காரணமா?

Jayam Ravi: என்னதான் விழுந்து புரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் என்று சொல்வார்கள். இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ ஜெயம் ரவிக்கு நன்றாக பொருந்தி வருகிறது. அதாவது கதையை தேர்ந்தெடுப்பதிலும் நடிப்பதிலும் இவரை குறை சொல்லவே முடியாது.

அந்த அளவிற்கு கச்சிதமாக நடித்து இவரை யாருமே வெறுக்காத அளவிற்கு ஹீரோவாக முத்திரை பதித்திருக்கிறார். ஆனாலும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

எப்படியாவது மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்று உருண்டு புரண்டு நடித்து வருகிறார். ஆனாலும் இவருடைய படங்களில் சொல்ற அளவுக்கு ஒன்னும் இல்லை என்பது போல் ரசிகர்களிடம் மொக்கை வாங்கி வருகிறது.

ஆனால் இதற்கு என்ன காரணம் என்றால் இவருடைய மாமியாரின் ராசி தான் ஜெயம் ரவி இடம் ஒட்டிக்கொண்டு படுத்தி எடுக்கிறது. அதாவது ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார். இவர் பெரிய லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெயம் ரவியை வைத்து மூன்று படங்களை தயாரித்து இருக்கிறார்.

மாமியாரை விட்டு விலகிய ஜெயம் ரவி

அப்படி இவர் தயாரித்த படம் அடங்கமறு, பூமி மற்றும் சைரன். இதில் பூமி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் சமீபத்தில் வெளிவந்த சைரன் படம் வசூல் அளவிலும் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அடி வாங்கிவிட்டது. சரி ஓடிடி-ல் வெளியிட்டாவது மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேற்று வெளியிட்டு இருந்தார்கள்.

ஆனால் ஓடிடி-யிலும் பெருசாக சொல்லும்படி வரவேற்பு கிடைக்கவில்லை. அதாவது சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்து வந்த கதையை தான் பட்டி டிங்கிரி பார்த்து சைரன் படமாக எடுத்திருக்கிறார்கள். இதனால் தான் மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கிறது.

அத்துடன் இப்பொழுதுதான் ஜெயம் ரவிக்கு மாமியாரின் ராசியால் தான் அதிர்ஷ்டம் கிடைக்காமல் போய்விட்டது என்று தெரிந்திருக்கிறது. அதனால் தான் அடுத்த இரண்டு படங்களிலும் மாமியாரை கிட்ட கூட சேர்க்காமல் வேறு ஒரு நல்ல தயாரிப்பாளர்களிடம் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில் வரக்கூடிய படத்தின் மூலம் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

Trending News