சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சொகுசா இருக்க ஆசை, அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்ன நடிகையின் அம்மா.. டார்ச்சர் தாங்காமல் ஓடிய சம்பவம்

பொதுவாக ஹீரோயின்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் அம்மாவுடன் தான் வருவார்கள். இன்று முன்னணியில் இருக்கும் பல நடிகைகளும் அம்மாவின் அரவணைப்பில் முன்னேறி வந்தவர்கள் தான். அப்படித்தான் அந்த நம்பர் நடிகையும் பக்கத்து மாநிலத்தில் இருந்து தன் அம்மாவுடன் சினிமா கனவை எதிர்நோக்கி கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

நடிக்க வந்த வேகத்திலேயே பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்திற்கு வந்தார் அந்த நடிகை. அது மட்டுமல்லாமல் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது. இதனால் நடிகை சில வருடங்களில் பல மடங்கு சம்பளம் வாங்கும் நிலைக்கு முன்னேறினார். ஆனால் அதில் எல்லாம் திருப்தி அடையாத நடிகையின் அம்மா தன்னுடைய சொகுசு வாழ்க்கைக்காக நடிகையை பலருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

Also read: காதலிக்காக போதையை போட்டு இயக்குனரை அடித்த நடிகர்.. மார்க்கெட் போனதால் பிரேக்கப்பில் முடிந்த காதல்

முதலில் மறுத்த நடிகை அம்மாவின் டார்ச்சர் தாங்காமல் அதற்கு சம்மதித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இதையெல்லாம் விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகலாம் என்று நினைத்த நடிகை தன் அம்மாவிடம் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால் எங்கே மகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் சொகுசு வாழ்க்கை வாழ முடியாதோ என்று பயந்த அம்மா அதற்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறார்.

ஆனாலும் பிடிவாதமாக இருந்த அந்த நடிகை தன் காதலரை திருமணம் செய்தே தீருவேன் என்று சண்டை பிடித்திருக்கிறார். இப்படியே அடுத்தடுத்த பிரச்சனைகளால் நிம்மதி இல்லாமல் தவித்த நடிகை ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார். அதன் பிறகு அவருடைய அம்மா கெஞ்சி கூப்பிட்டும் கூட அவர் வர மறுத்திருக்கிறார்.

தற்போது தன் அம்மாவை பிரிந்து தனியாக வசித்து வரும் அந்த நடிகை காதலிலும் தோல்வி அடைந்து விட்டார். இனிமேல் தனக்கு வேறு எந்த உறவும் வேண்டாம் என்று முடிவெடுத்த நடிகை தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எதிர்காலத்திலும் இனிமேல் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்ற வைராக்கியத்திலும் அவர் இருக்கிறாராம்.

Also read: இளசான நடிகைகளுக்கு வலை விரிக்கும் 80 வயது தயாரிப்பாளர்.. சினிமா ஆசை காட்டி ஏமாற்றும் அவலம்

Trending News