சினிமா வரலாற்றில் 50 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே படம்.. தேவர் மகனுக்கே கொடுத்த டஃப்

Best Tamil Movies: தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் முதன் முதலாக சென்னை நகரில் ரிலீஸான அனைத்து தியேட்டரிலும் 120 நாட்களுக்கு மேல் ஓடி சரித்திர சாதனை படைத்த ஒரே படம், உலக நாயகன் கமலஹாசனின் சூப்பர் ஹிட் படமான தேவர் மகனுக்கே பயங்கர டஃப் கொடுத்திருக்கிறது.

1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான இந்த சரித்திர சாதனை படைத்த படத்தின் தாக்கத்தால், அதே வருடத்தில் 5 மாதம் கழித்து ரிலீசான கமலின் தேவர்மகன் திரைப்படம் 15 தியேட்டர்களில் மட்டுமே 100 நாட்கள் ஓடியது. அத்தகைய சாதனை திரைப்படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாமலை.

Also Read: பிரபாஸ் கமல் கூட்டணி கிளைமாக்ஸ் இல் இப்படி ஒரு டிவிஸ்டா?.150 கோடி கொடுக்குறதுல தப்பே இல்லை

ஏழை பணக்காரனின் வேறுபாடுகளை காட்டும் விதத்தில் தமிழ் சினிமாவிற்கு எத்தனையோ படம் வெளி வந்தாலும் அண்ணாமலை படத்தில் ரஜினியின் எதார்த்தமான நடிப்பு, அந்தப் படத்தை 50 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடச்செய்தது. இந்த படத்தில் காதல், துரோகம், ஆக்ரோஷம், நம்பிக்கை போன்ற அனைத்தையும் ரசிகர்கள் விரும்பும் வகையில் அண்ணாமலை படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மிகச்சிறப்பாக இயக்கி இருப்பார். 

இந்த படத்தில் ரஜினி பேசிய ஒவ்வொரு பஞ்ச் டயலாக்கும் செம பேமஸ். இதனால் இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்ததுடன், அண்ணாமலை 18 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. அதன்பிறகு வெளியான கமலின்  தேவர் மகன் திரைப்படமும் அண்ணாமலை படத்திற்கு நிகராக பேசப்பட்டது.

Also Read: ரஜினியை போட்டு ஆட்டும் கர்மா.. டபுள் மடங்கு சம்பளம், விட்ட இடத்தை பிடித்த உலகநாயகன்

சாதி வெறி, வன்முறை போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என மறைமுகமாக வலியுறுத்தினாலும், இந்த படத்தில் அது நிரம்பிக் கிடக்கும்.  இருப்பினும் கிராமத்தை கதைக்களம் கொண்ட இந்த படத்தில் உலகநாயகன் கமலஹாசன் உடன் பெரிய தேவராக சிவாஜி கணேசன் நடித்திருப்பார். 1992 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியான தேவர் மகன் வசூலில் சக்கை போடு போட்டது.

அது மட்டுமல்ல தேசிய விருதையும்  பெற்ற இந்தப் படம் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. என்னதான் இந்த படத்திற்கு ஏகப்பட்ட விருதுகள் குவிந்தாலும், ரஜினியின் அண்ணாமலைபடம் தேவர் மகனுக்கு பயங்கர டஃப் கொடுத்தது.   அண்ணாமலை படத்திற்கு நிகராக தேவர் மகன் திரையரங்கை ஆக்கிரமிக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Also Read: குடும்ப பிரச்சனையா, அரசியல் சதியா.? இரண்டு மாத கருவுடன் உயிர் நீத்த ரஜினி பட ஹீரோயின்

Next Story

- Advertisement -