வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

முரளியால் ஏற்பட்ட பல கோடி நஷ்டம்.. 30 வருட நட்பால் சினிமாவை வெறுத்து ஒதுங்கிய இயக்குனர்

தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் தான் முரளி. கருப்பாக இருந்தாலும் தன்னுடைய திறமையால் முன்னணி நடிகராக மாறிய இவர் இறுதி வரை காலேஜ் ஸ்டூடண்ட் ஆகவே நடித்த பெருமைக்குரியவர். அந்த அளவுக்கு இவர் இறுதி வரை இளமையாகவே வாழ்ந்திருக்கிறார்.

எப்பொழுதுமே அமைதியின் மறு உருவமாக இருக்கும் முரளிக்கு சில தீய பழக்க வழக்கங்களும் இருந்திருக்கிறது. அதனாலேயே அவர் இந்த உலகத்தை விட்டு மிக விரைவாக மறைந்து விட்டார். பல குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் முரளி சோலோ ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் இரண்டு, மூன்று ஹீரோக்கள் இருக்கும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

Also read:குடும்ப நட்சத்திரமாக ஜொலித்த முரளியின் 5 படங்கள்.. கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்கள்

அப்படி இவர் நடிகர் அப்பாசுடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் காதலுடன். இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக தேவயானி நடித்திருப்பார். அப்படத்தை தேவையானி தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரித்து இருந்தார். மிகவும் நன்றாக வந்திருந்த அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இதனால் தேவயானி மற்றும் ராஜகுமாரன் இருவரும் பல கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தனர். இந்த நஷ்டத்திற்கு காரணம் முரளி தான் என்று தற்போது ராஜகுமாரன் கூறியிருப்பது பகீர் கிளப்பி இருக்கிறது. அதாவது ராஜகுமாரனுக்கு முரளியுடன் 30 ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே காதலுடன் திரைப்படத்தில் அவரை நடிக்க கேட்டிருக்கிறார்கள்.

Also read:30 வருடமாகியும் ரசிகர்கள் கொண்டாடும் முரளியின் சூப்பர் ஹிட் படம்.. கடைசிவரை சொல்லாமல் போன காதல்.!

அதற்கு சம்மதித்து நடிக்க வந்த முரளி சூட்டிங் ஸ்பாட்டிலேயே தண்ணி அடித்து விட்டு சரியான நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கிறார். இதனாலேயே படப்பிடிப்பு தாமதமாகி இருக்கிறது. அந்த காலகட்டத்தில் ராஜகுமாரன் மிகுந்த சிரமங்களை சந்தித்ததாக கூறியிருக்கிறார். மேலும் அந்தப் படத்தை எடுத்து பத்து லட்சம் கூட அவரால் சம்பாதிக்க முடியவில்லையாம்.

அதனால் முரளி என் சினிமா கனவு முழுவதையும் தகர்த்து விட்டார் என்று தற்போது ராஜகுமாரன் புலம்பி வருகிறார். அவரால்தான் நான் சினிமாவில் சறுக்கி விட்டேன் என்றும் இன்றுவரை எனக்கு சினிமாவில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். இந்த விஷயம் தற்போது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Also read:பாலச்சந்தரின் மற்றுமொரு படைப்பு.. ரீஎன்ட்ரியில் வில்லனாய் கலக்கும் இதயம் முரளியின் நண்பர்

Trending News