Gossip: மாஸ் நடிகர் தற்போது நடித்துள்ள படம் குறித்து எப்போதாவது தான் அப்டேட் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நடிகரின் முந்தைய படம் கொடுத்த பில்டப்புக்கும் படத்துக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது.
அதனாலேயே நடிகர் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லி இயக்குனருக்கு சத்தம் இல்லாமல் உத்தரவு போட்டிருக்கிறார். ஆனாலும் படத்திற்கு ஆரவாரம் அதிகமாக தான் இருக்கிறது. ஆனால் தற்போது அது சல்லி சல்லியாக நொறுங்கி விட்டது.
ஏற்கனவே இரண்டு பாடல் வெளியான நிலையில் மூன்றாம் பாடல் தான் கடும் விமர்சனமாக மாறியுள்ளது. அதிலும் மாஸ் நடிகரை இளம் தோற்றத்தில் காட்டுவதில் இயக்குனர் சொதப்பிவிட்டார்.
இசை வாரிசு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை
இதுதான் இப்படி என்றால் பாடலும் ரொம்பவும் சுமாராக இருக்கிறது. இதனால் அந்த இசை வரிசை போட்டு அவருடைய ரசிகர்கள் பொளந்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இசையமைப்பாளர் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது வெளிநாட்டில் குடியேறி இருக்கும் அவர் கடந்த சில மாதங்களாக கொஞ்சம் மன வருத்தத்தில் இருந்தார். வீட்டில் எதிர்பாராத சம்பவம் நடந்தது ஒரு பக்கம் அதனால் ஏற்பட்ட சொத்து பிரச்சனை ஒரு பக்கம் என அவரை தடுமாற வைத்திருக்கிறது.
இதுதான் இந்தப் பாடல் சர்ச்சைக்கும் காரணமாக இருக்கிறது. ஆனாலும் மாஸ் ஹீரோ இன்னும் ஒரு படத்தோடு சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இந்த நேரத்தில் ஒவ்வொன்றையும் கவனமாக செய்யாமல் அண்ணன் தம்பி இருவரும் அசால்ட் ஆக இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாஸ் ஹீரோவுக்கு ஆப்பு வைத்த இசை வாரிசு
- காதல் கணவருக்கு துரோகம் செய்த நடிகை
- சர்ச்சையில் சிக்கி காணாமல் போன நடிகை
- சொந்த படம் எடுத்து சொத்துக்களை இழந்த ஹீரோ