திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திருமணத்திற்கு தனியாக வந்த புது மாப்பிள்ளை கௌதம் கார்த்திக்.. பொண்டாட்டிய மறந்துட்டு வர இப்படி ஒரு காரணமா?

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். சிம்புவுடன் இணைந்து பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கும் இவருக்கு சமீபத்தில் தான் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. மூன்று ஆண்டுகளாக மஞ்சிமா மோகனை காதலித்து வந்த இவர் தற்போது தன் காதலியை கரம் பிடித்துள்ளார்.

இவர்களுக்கு திருமணம் நடந்து தற்போது பத்து நாட்கள் தான் கடந்திருக்கிறது. ஆனால் அதற்குள்ளாகவே புது மாப்பிள்ளை கௌதம் கார்த்திக் மனைவியை விட்டு பிரிந்து தனியாக ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். இதுதான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் மகளுக்கு திருமணம் நடைபெற்றது.

Also read: 3 ஆண்டு வெறித்தனமான காதல்.. திருமண கோலத்தில் டிரெண்டாகும் புகைப்படத்தை வெளியிட்ட மஞ்சுமா, கௌதம் ஜோடி

அந்த நிகழ்வில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது கௌதம் கார்த்திக்கும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார். ஆனால் அவர் தன் மனைவியுடன் வராமல் தனியாக வந்திருந்தார். பொதுவாகவே புதிதாக திருமணம் ஆனவர்கள் இது போன்ற விசேஷங்களுக்கு ஒன்றாக இணைந்து செல்வதுதான் வழக்கம். புதுமண தம்பதிகள் மறு திருமணத்தை பார்ப்பது நமது தமிழ் கலாசாரத்தில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஆனால் கௌதம் கார்த்திக் மனைவியை அழைத்து வராமல் தனியாக வந்தது சில விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் மஞ்சிமா மோகன் கடந்த சில வருடங்களாகவே அவரை பலரும் உருவ கேலி செய்து வருகின்றனர். அவருடைய திருமணத்தின் போது கூட நெருங்கிய உறவுகள் அவருடைய உருவத்தை கேலி செய்து பேசி இருக்கின்றார்கள்.

Also read: திருமண தேதியை உறுதிசெய்த கௌதம் கார்த்திக்.. மஞ்சிமாவை காதலிக்க இப்படி ஒரு காரணமா?

இதனால் கௌதம் கார்த்திக் சிறிது மனம் உடைந்து போயிருக்கிறார். அதனால் தான் இந்த திருமண நிகழ்ச்சிக்கு அவர் தனியாக வந்தாராம். ஏனென்றால் இந்த நிகழ்ச்சியிலும் யாராவது தன் மனைவியை கேலி செய்து விடுவார்களோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.

bofta-maariage-gautham-karthik
bofta-maariage-gautham-karthik

திருமணத்திற்கு முன்பு இது போன்ற விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருந்த மஞ்சிமா மோகன் தற்போது தன் கணவர் வருத்தப்படுவதை தெரிந்து கொண்டு தன் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார். அதனால் தான் அவர் இப்போது இது போன்ற விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறாராம். திருமணம் நடந்த ஒரே வாரத்தில் புதுமண தம்பதிகள் இப்படி தனியாக வருவது திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

Also read: திருமணத்திற்கு தேதி குறித்த ஜோடி.. காதலியை கரம் பிடிக்க போகும் கௌதம் கார்த்திக்

Trending News