சென்சார் போர்டு கிளப்பிய புது பிரச்சனை.. துணிவு படத்திற்கு போட்ட தடை

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தில் அவர் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளிவந்த ட்ரெய்லரும் பலரையும் அசரடித்தது. இந்தப் படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் மோத இருப்பதால் தற்போது திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தை முஸ்லிம் நாடுகளில் வெளியிடுவதில் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது சவுதி அரேபியாவில் இந்த படத்தை பார்த்த சென்சார் குழு இப்படத்திற்கு தடை விதித்திருக்கிறது. ஏனென்றால் இந்த படத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளை மையப்படுத்தியும், அளவுக்கு அதிகமான துப்பாக்கியை பயன்படுத்தி உள்ள காட்சிகளும் அவர்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது.

Also read: துணிவை தாண்டிய சஸ்பென்ஸ் வாரிசு படத்தில் உள்ளது.. எதிர்பார்ப்பை அதிகரித்த இயக்குனர்

அதனால்தான் அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் சவுதியில் இந்த நிலை தொடர்ந்தால் மற்ற நாடுகளிலும் துணிவு திரைப்படம் திரையிடப்படாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் அஜித் ரசிகர்களும் துணிவு திரைப்படத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் பல இடங்களிலும் ரசிகர்கள் டிக்கெட்டுகளை புக் செய்து கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த படம் வெளிவராது என்று தெரிந்தால் அவர்களுடைய நிலைமை என்ன ஆகுமோ தெரியவில்லை. இந்த விஷயம் தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே துணிவு திரைப்படத்தில் இங்குள்ள சென்சார் குழு பல இடங்களில் பீப் சவுண்ட் போட்டிருந்தது.

Also read: துணிவு படத்திற்கு வினோத் முதலில் தேர்வு செய்த ஹீரோ.. மனைவியால் அஜித்துக்கு அடிச்ச அதிர்ஷ்டம்

அது மட்டுமல்லாமல் படத்தில் 17க்கும் மேற்பட்ட இடங்களில் கெட்ட வார்த்தைகள் இருக்கிறது என்ற தகவல்களும் வெளியானது. ட்ரைலரில் கூட அஜித் பேசும் ஒரு கெட்ட வார்த்தை காட்சியும் இடம்பெற்று இருந்தது. இது போன்ற விஷயங்கள்தான் துணிவு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது.

ஆனால் அதுவே வெளிநாடுகளில் பின்னடைவையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே வெளிநாடுகளில் வாரிசு படத்திற்கு அதிக மவுசு இருப்பதாக பேசப்படுகிறது. அதனால்தான் துணிவு திரைப்படத்திற்கு பல வகைகளில் பிரமோஷன் நடைபெற்று வந்தது. தற்போது வெளிவந்துள்ள இந்த விவகாரம் துணிவு படத்தின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற ஒரு கலக்கமும் இப்போது பட குழுவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

Also read: அஜித் கூடவே ஹீரோவா போட்டி போட்டு.. இப்ப அவருக்கே வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்