Serial: சின்னத்திரை மூலம் சீரியல்கள் ஒவ்வொரு குடும்பங்களிலும் கொடி கட்டி பறக்கிறது. அதற்கு காரணம் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கே சீரியல் தான் என்பதால் அவர்களை கவரும் வகையில் கதைகள் அமைப்பதால் தொடர்ந்து பல சேனல்கள் புத்தம் புது நாடகங்களை இறக்கிக் கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சீரியல் என்றாலே சன் டிவி தான் என்று சொல்வதற்கு மக்கள் மத்தியில் முதல் இடத்தை பெற்று விட்டது. இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கும் மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்தில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் புதுப்புது சீரியல்களை கொண்டு வந்து மக்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சி எடுக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது புத்தம் புது சீரியலாக வந்த ஒரு சீரியல் இரண்டு வாரங்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் கெத்து காட்டி வருகிறது. அதாவது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கார்த்திகை தீபம், அண்ணா, சந்தியா ராகம் மற்றும் வீரா சீரியல் முதல் ஐந்து இடங்களை பிடித்திருந்தது.
ஆனால் தற்போது இரண்டு வாரங்களுக்கு முன் ஒளிபரப்பாகி வந்த கெட்டி மேளம் என்ற சீரியல் வீரா சீரியலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு பக்கத்தில் வந்துவிட்டது. அந்த வகையில் முதலாவதாக இருக்கும் அண்ணா சீரியலின் டிஆர்பி ரேட்டிங் 5.61 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதில் புதிதாக வந்த கெட்டி மேளம் என்ற சீரியல் 4.49 புள்ளிகளை பெற்று மக்களின் ஃபேவரிட் சீரியலாக ஜொலித்துக் கொண்டு வருகிறது.
இதில் சாயாசிங் துளசி என்ற கேரக்டரில் நடித்த வருகிறார். மேலும் வெற்றி என்ற கேரக்டரில் சிப்பு சூரியன் நடிக்கிறார். இவர்கள் இரண்டு பேருடைய கெமிஸ்ட்ரியும் நடிப்பும் மக்களை கவர்ந்தால் தொடர்ந்து இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் வெளிவரும் டிஆர்பி ரேட்டிங் நிச்சயம் முதல் இடத்தை பிடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.