புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஜெய்லர் பட வில்லனை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி போன்றோரும் நடிக்கின்றனர்.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படமும், நெல்சனின் கடைசி படமான பீஸ்ட் படமும் சரியாக போகவில்லை. ஆகையால் முழு வீச்சில் இந்த படத்தை வெற்றி அடைய வேண்டும் என்ற நினைப்பில் நெல்சன் செயல்பட்டு வருகிறார்.

Also Read : நடிக்க முடியாமல் போன ரஜினி, நஷ்டத்தை ஈடு கட்டிய பெரிய மனுஷன்.. இப்பவும் ஸ்டாராக இருக்க இதுதான் காரணம்

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்துகிறது. அதாவது ஏற்கனவே கூகுளில் உள்ள புகைப்படத்தை நெல்சன் பயன்படுத்தி உள்ளார் என்று விமர்சித்திருந்தனர். இது இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.

அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் படத்தின் போஸ்டர் இப்படியா இருக்கும் என ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர். இதைத்தொடர்ந்து ரஜினி ஒரு ப்ரொபசர் லுக்கில் உள்ள போஸ்டர் வெளியாகி இருந்தது. இன்று 6:00 மணிக்கு ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.

Also Read : ரூட்டை மாத்தலேனா எல்லாருக்கும் கோவிந்தா.. மொத்தமா கடும் பிரஷரில் இருக்கும் ஜெயிலர் டீம்

அதில் ஜெயிலர் படத்தில் சிவராஜ் குமார் நடித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் ரஜினியின் போஸ்டருக்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை தான் தந்துள்ளது.

jailer-new-still

Also Read : ஜெயிலர் படத்தில் இருக்கும் 2 முக்கிய கேரக்டர்கள்.. ரஜினிக்கு இணையாக இருக்கும் பவர்ஃபுல் கதாபாத்திரங்கள்

Trending News