வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ரெட் கார்டு லிஸ்டில் சேர்ந்த அடுத்த 2 நடிகர்கள்.. வடிவேலுவை தொடர்ந்து ஒரு ஹீரோ, வில்லனுக்கு செக்

Comedian Vadivelu: நகைச்சுவை நடிகராக வலம் வரும் வடிவேலு சந்திக்கும் ரெட் கார்டு பிரச்சனை பூதாகரமாகி கொண்டு இருக்கிறது. இருப்பினும் இவருக்கு இணையாக தற்பொழுது இரு பிரபலங்கள் இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளார்கள்.

படத்தில் கமிட்டாகி பணம் வாங்கிக் கொண்டு தயாரிப்பாளர்களை சுத்த விடுவது, படப்பிடிப்பிற்கு சரியாக வராமல், தாமதமாக்குவது போன்ற பல காரியங்களை செய்து ரெட் கார்டு வாங்கி உள்ளார் வடிவேலு. அதன்பின் இவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவி வருகிறது.

Also Read: 90களில் கொடி கட்டி பறந்து திடீரென காணாமல் போன 5 நடிகைகள்.. சுவடே தெரியாமல் போன சுவலட்சுமி

அவ்வாறு இவர் வரிசையில் தற்பொழுது ஒரு ஹீரோவும், ஒரு வில்லனுக்கும் செக் வைக்கப்பட்டுள்ளது. அது யார் என்று பார்க்கையில் பாலிவுட் வில்லனாய் கலக்கி வரும் பிரபல நடிகரான விஜய் சேதுபதியும் மற்றும் மாநாடு பட வில்லனான எஸ் ஜே சூர்யாவும் தற்பொழுது இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.

அவ்வாறு ஜவான், பிசாசு 2, சலார் போன்ற அடுத்தடுத்த படங்களில் பிசியாக படப்பிடிப்பை மேற்கொள்கின்றார் விஜய் சேதுபதி. அதை பொருட்டு, ஊர் ஊராக சுற்றி வரும் இவர் பணத்தை வாங்கிக் கொண்டு படங்களில் கமிட்டாகி, தயாரிப்பாளர்களை சுத்த விட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Also Read: அதர்வா என்ன பெரிய அஜித்தா.? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாதுன்னு மல்லு கட்டிய இயக்குனர்

மேலும் அதேபோல் மாநாடு வெற்றிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா தன் அடுத்த கட்ட வாய்ப்புகளில் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வாறு சமீபத்தில் இவர் மேற்கொண்ட பொம்மை படம் பெரிய வரவேற்பு இன்றி காணப்படும் நிலையில், தன் அடுத்த முயற்சிக்கு தாமதம் காட்டி வருகிறார்.

இது போன்ற காரணங்களால் இவர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மேல்முறையீட்டிற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வடிவேலுவை போன்று இவர்களுக்கும் இந்த நிலைமையா என்ற கேள்வியை, சினிமா வட்டாரங்கள் முன்வைத்து வருகின்றனர்.

Also Read: ரஜினியை போட்டு ஆட்டும் கர்மா.. டபுள் மடங்கு சம்பளம், விட்ட இடத்தை பிடித்த உலகநாயகன்

Trending News