செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட், பஜாரியை அடித்து துரத்தும் பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான சண்டை நிலவி வருகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல சற்றும் எதிர்பார்க்காத சில போட்டியாளர்கள் இடைய சண்டை வெடிக்கிறது.

இவ்வாறு கலவரமாகும் பிக் பாஸ் வீடு அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே பாசமழையில் நனைந்து விடுகிறது. இவர்களுக்குள் தான் இவ்வாறு சண்டை நடந்ததா என்று யோசித்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பின்னிப்பிணைந்து கிடக்கிறார்கள்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 கடைசி 5 பைனலிஸ்ட் இவர்கள் தான்.. இப்பவும் தில்லாலங்கடி வேலையை கையாளும் விஜய் டிவி

இந்நிலையில் கடந்த வாரம் விதிகளை மீறியதாக ஷெரினா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் நாமினேஷனில் தனலட்சுமி, மகேஸ்வரி, விக்ரமன், ஆயிஷா, ஏ டி கே, அசீம் மற்றும் ராம் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதில் விக்ரமனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது.

இவரைத் தொடர்ந்து அசீமுக்கு இப்போது வெளியில் நல்ல பெயர் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஏடிகே மற்றும் ராம் ஆகியோரும் இந்த வாரம் காப்பாற்றப்படுகிறார்கள். மீதமுள்ள பெண் போட்டியாளர்களான தனலட்சுமி, மகேஸ்வரி, ஆயிஷா ஆகியோரிலிருந்து ஒருவர் வெளியேற்ற உள்ளனர்.

Also Read : விதிகளை மீறியதால் எலிமினேட் செய்யப்பட்ட ஷெரினா.. 28 நாட்களுக்கு பிக் பாஸ் கொட்டி கொடுத்த சம்பளம்

கடந்த இரண்டு வாரங்களாக மந்தமாக இருந்த ஆயிஷா இந்த வாரம் படுஜோராக விளையாடினார். ஆனால் தனலட்சுமி மற்றும் மகேஸ்வரி தேவையில்லாமல் மற்ற போட்டியாளர்களிடம் வேண்டுமென்றே சண்டையிட்டு வந்தனர். இதனால் ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்து உள்ளனர்.

அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு மகேஸ்வரி வெளியேற உள்ளார். விஜேவாக அறிமுகமாகி அதன் பின்பு சின்னதிரை தொடர்களில் நடித்து வந்த மகேஸ்வரி கணவனை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் இவருடைய தவறான அணுகுமுறையால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read : எதிர்பாராததை நடத்திக் காட்டும் பிக் பாஸ் ஆண்டவர்.. அதிக பிரசங்கித்தனத்தால் வெளியேறும் போட்டியாளர்

Trending News