வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிம்புக்கு எப்போது கல்யாணம்.? அவர் தாலி கட்டினால் தான் எனக்கு திருமணம்.!

கடந்த 2002ஆம் ஆண்டு இளைய தளபதி விஜயின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம்தான் பகவதி. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு தம்பியாக இளம் நடிகர் ஜெய் நடித்திருப்பார். அதன் பிறகு இருவரின் கூட்டணியில் எந்த படமும் வெளியாகவில்லை. பகவதி படத்திற்குப் பிறகு தளபதி விஜய்யின் மற்ற படங்களில் எல்லாம் தம்பியாக வேறு வேறு நடிகர்கள் தான் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் விஜய் மற்றும் ஜெயின், அண்ணன்-தம்பி செண்டிமெண்ட் பகவதி படத்தில் கச்சிதமாக பொருந்தியது. அதன் பிறகு ஜெய் கதாநாயகனாக இருந்து பல படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார் குறிப்பாக சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இவருடைய நடிப்பு பெருமளவு பேசப்பட்டார்.

தற்போது ஜெய், பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவசிவ, குற்றமே குற்றம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் சுந்தர் சியுடன் பெயர் வைக்காத மற்றொரு படத்தில் வில்லனாகவும் கமிட்டாகியுள்ளார்

இந்நிலையில் நடிகர் ஜெயிடம் மீண்டும் தளபதி விஜயுடன் எப்பொழுது இணைந்து நடிப்பீர்கள்? என்று கேட்டபோது, ‘எனக்கும் விஜயுடன் நடிப்பதற்கு ஆசையாகத்தான் உள்ளது. இதுவரை 150 தடவைக்கும் மேலாக வாய்ப்பு கேட்டு விட்டேன். ஆனால் அவரோ சினிமாவில் நீதான் இப்போ ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். அப்புறம் ஏன்? என்று கேட்டு விடுகிறார்’ என ஜெய் பதிலளித்துள்ளார்.

jai-simbu-cinemapettai
jai-simbu-cinemapettai

அதன் பிறகு ஜெய் தனது திருமணத்தைப் பற்றி பேசி உள்ளார். என்னவென்றால் உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேட்டபோது, சிம்பு திருமணம் செய்து கொண்ட பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன்.

அனேகமாக சிம்புவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்துவிடும் என்று ஜெய் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தியானது சிம்பு ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending News