வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸாகும் அடுத்த படம்.. ரஜினியின் நண்பர் நினைவாக எடுத்த முடிவு

Super Star Rajini: தமிழ் சினிமாவில் இப்போது படங்களை ரீ ரிலீஸ் செய்வது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவருடைய பழைய படங்கள் ஏதாவது ஒன்று ரீ ரிலீஸ் செய்து ரசிகர்களை குஷிப்படுத்துவார்கள். அந்த வகையில் கடந்த வருடம் ரஜினியின் பாபா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்காமல் போனது. ஆனால் இந்த வருடம் ரஜினியின் 73 ஆவது பிறந்த நாளின் போது சூப்பர் ஸ்டாரின் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கின்றனர். அதுவும் ரஜினியின் நண்பரின் நினைவால் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போகின்றனர்.

Also Read: சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு.? ரஜினியை முன்னிறுத்தி சன் பிக்சர்ஸ் செய்யும் பாலிடிக்ஸ்

அதற்காக பல ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த கலைஞர் இறந்து விட்டதால் அவருக்கு சமர்ப்பிக்கும் விதமாக இது இருக்கும் என்று அனைவரும் கூறுகின்றனர். ரஜினி நடித்த சூப்பர் ஹிட் ஆன படம் முத்து. இப்பொழுது இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாளுக்காக ரீ ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் எஜமான் மலயசிம்மன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினியின் நண்பரான சரத்பாபு, படத்திலும் நெருங்கிய நண்பராகவே நடித்திருப்பார். அவர் இப்போது நம்முடன் இல்லை. அவருடைய நினைவால்தான் ரஜினியின் 73 ஆவது பிறந்தநாள் அன்று முத்து படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கான அத்துணை ஏற்பாடுகளும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

Also Read: ஜெயிலரால் மொத்த சொத்தையும் இழந்து தயாரிப்பாளர்.. ரஜினியை மலைபோல் நம்பி வைத்த கோரிக்கை

1995 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் காமெடிக்கும் கலகலப்பிற்கும் பஞ்சமில்லாத படமாக இருக்கும். அப்படிப்பட்ட இந்த படத்தை மறுபடியும் ரஜினியின் பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் செய்யப் போகின்றனர் என்பதை அறிந்ததும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

அது மட்டுமல்ல இந்த படத்தின் மூலம் சமீபத்தில் மறைந்த நடிகர் சரத்பாபுவின் நினைவாக, அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகவும் நினைக்கின்றனர். ஏற்கனவே பாபா படத்தைப் போல இல்லாமல் இந்த படம் நிச்சயம் வசூலிலும் பட்டையை கிளப்பும் என பட குழு நம்புகிறது.

Also Read: மாலத்தீவில் ரஜினி போட்ட சீக்ரெட் மீட்டிங்.. மொத்த நிம்மதிக்கும் உலைவைக்கும் குடும்பம்

Trending News