Actor Vijay: தன் திறமையை, நடிப்பின் மூலம் வெளிக்காட்டி தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது அரசியல் பயணம் மேற்கொள்ளும் இவர் அடுத்த தலைமுறையை டார்கெட் ஆக நினைத்து செய்து வரும் காரியம் தற்பொழுது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
சினிமாவில் லியோ படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது அரசியலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார் விஜய். அதற்கு முன் உதாரணமாக சமீபத்தில் 10 மற்றும் 12வது வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதத்தில் இவர் கொடுத்த அன்பளிப்பின் மூலம் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டார்.
Also Read: லியோவுக்கு எண்டு கார்டு போட்டதும் விடாமுயற்சிக்கு விடிவு காலம்.. 4 இடத்தை குறிவைத்த அஜித்
அதை தொடர்ந்து சமீபத்தில் பனையூரில் இருக்கும் தன் பங்களாவில், இயக்க உறுப்பினர்களுடன் தேர்தல் குறித்த ஆலோசனை போடப்பட்டு, திட்டம் தீட்டி வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் அன்று கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் ஜூலை 15ஆம் தேதி இரவு பாடசாலை தொடங்க இருக்கிறார்.
அவ்வாறு 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை திட்டத்தை தொடங்கும் முயற்சியில் அதற்கு படிப்பகம், பயிலகம், கல்வியகம், அறிவாலயம் போன்ற பெயர்களில் ஒன்று இணைந்த திட்டத்தை அமைக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதிலும் தொகுதி வாரியாக ஒரு தொகுதிக்கு 4 பாடசாலைகளுக்கு மேல் கொண்டு வர திட்டம் போட்டு உள்ளார்.
Also Read: திருமணத்திற்கு பிறகு கள்ள உறவில் இருந்த 6 நடிகர்கள்.. பிரபுதேவாவை வசியம் செய்த நயன்
பாடசாலையில் மாணவ மாணவிகளுக்கு கல்வி சொல்லி தர இளநிலை பட்டம் பயின்ற ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு எடுத்துள்ளார். மாணவர்களின் கல்வியை மேம்படுத்த இது போன்ற செயல் திட்டங்களை செய்வதன் குறித்து இரவு பாடசாலையை தொடங்கியுள்ளார்.
மேலும் ஊக்கத்தொகை திட்டம், நலத்திட்டம், மாணவ மாணவியர்களின் மேம்பாட்டுக்கான பல திட்டங்களை மேற்கொள்ளும் இவர் அரசியலில் முதல் டார்கெட் ஆக இளம் தலைமுறையினரை ஈர்க்க, கவனம் செலுத்தி வருகிறார். இது போன்ற செயல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
Also Read: விபரீத பிளான் போட்ட இயக்குனர்.. படுக்கையறை காட்சியில் சின்னா பின்னமான நடிகை