செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

வெற்றிக்காக ரஜினி துணிந்து செய்த காரியம்.. அடுத்த தலைமுறையினரை சீரழிக்கும் லோகேஷ், நெல்சன்

Nelson, Lokesh: தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரே மாதிரியான படங்கள் வெளியாகும். ஆனால் இப்போது தமிழ் சினிமாவின் போக்கு ரசிகர்களை பயமுறுத்தும் படியாக தான் இருக்கிறது. அதாவது லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் போன்ற இயக்குனர்களை கொண்டாடி வருகிறார்கள்.

ஏனென்றால் ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களின் படங்களை இயக்கி ஹிட் கொடுத்து விடுகிறார்கள். இதனால் இயக்குனர்கள் கோடிக்கணக்கில் சம்பளமும் வாங்கிக் கொள்கிறார்கள். மேலும் விக்ரம் படம் கொடுத்த வெற்றியால் ரஜினியும் இந்த காரியத்தை செய்ய துணிந்திருக்கிறார்.

Also Read : நம்ப ஹீரோக்களை ஏமாற்றும் லோகேஷ் கனகராஜ்.. திடீரென அக்கட தேசத்துக்கு தாவுவதால் வரும் பிரச்சனை

இதுவரை கமர்ஷியல் படங்கள் மட்டும் தான் ரஜினி நடித்து வந்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் இரத்தக் கரை உடன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதேபோல் ஜெயிலர் படத்தையும் வெற்றி அடைய வேண்டும் என குழந்தைகள் நடுங்கும்படியான காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது.

ரஜினி இதற்கு எப்படி சம்மதித்தார் என்ற கேள்வியும் ஒரு பக்கம் இருக்கிறது. மேலும் இந்த சூடு தனிவதற்கு உள்ளாகவே நேற்று அர்ஜுனின் அறிமுக வீடியோவை லியோ படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். அதில் சுத்தியலால் ஒருவரை அடிக்கும் காட்சி நெஞ்சை பதப்பதைக்க வைத்திருந்தது.

Also Read : நெல்சனுக்கு கார் வரும்னு பார்த்தா லோகேஷ் மிரள விட்ட பி.எம்.டபிள்யூ.. விலையை கேட்டா தலைய சுத்துது

இவ்வாறு நெல்சன் மற்றும் லோகேஷ் போன்ற இயக்குனர்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு நாட்டை சீரழிக்கும் விதமான காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இது அடுத்த தலைமுறையினரை நிச்சயம் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதோடு மட்டுமல்லாமல் இந்த படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது.

இப்படி எடுத்தால் தான் படம் ஓடும் என்று வரும் காலங்களில் வருடத்திற்கு 250 படங்கள் வெளியானால் அதில் 240 படங்களில் இது போன்ற கொலை வெறி தாக்குதலான காட்சிகள் தான் நிச்சயம் இடம்பெறும். இப்போது பள்ளி படிக்கும் மாணவர்களின் கையில் கத்தி, அருவா இருப்பதற்கு இது போன்ற படங்களுமே ஒரு முக்கிய காரணம்.

Also Read : தலைவருக்கு கொடுத்த ஜெயிலர் வெற்றி ஏன் விஜய்க்கு கொடுக்கல.. மறைமுகமாக நெல்சன் புலம்பிய காரணம் இதுதான்

Trending News