கடந்த சில தினங்களாக இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஜோடி மகாலட்சுமி மற்றும் ரவீந்தர். பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு இந்த திருமணம் ட்ரெண்டானது.
அதுமட்டுமின்றி இவர்களது திருமணம் இணையத்தில் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் ரவீந்தர், மகாலட்சுமி திருமண நாளன்று விஜய் டிவியின் இரண்டு பிரபலங்களுக்கு திருமணம் நடைபெற்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் புகழுக்கு அவரது காதலி பென்ஸி உடன் திருமணம் நடைபெற்றது.
Also Read : வாட்டர் பெட்டில் உல்லாசமாக உறங்கும் மகா.. ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்ட லிப்ரா ரவி
இதைத்தொடர்ந்த விஜய் டிவியின் பிரபல தொடரான ராஜா ராணி 2 தொடரில் நடித்து வரும் பிரபலத்திற்கு திருமணம் முடிந்துள்ளது. தற்போது ராஜா ராணி தொடர் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே அர்ச்சனா சில காரணங்களால் சீரியலை விட்டு வெளியேறி உள்ளார்.
இதனால் விஜே அர்ச்சனாவுக்கும், பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக நடித்து வரும் அருணுக்கும் விரைவில் திருமணம் என கூறப்பட்டது. ஆனால் ராஜா ராணி 2 தொடரில் அர்ச்சனாவின் கணவர் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாலாஜி தியாகராஜன்.
Also Read : ஹீரோவாகும் ராஜா ராணி சீரியல் நடிகர்.. அடுத்த சிவகார்த்திகேயன் என பில்ட்டப் பண்ணும் நடிகர்
இத்தொடரில் அர்ச்சனா உடன் அடிக்கடி சண்டை போடும் எதார்த்தமான கணவனாக நடித்திருப்பார். இவர் ஷார்ட் பிலிம், யூடிபில் வெப் சீரிஸ் சில தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பாலாஜி தியாகராஜனுக்கு திடீரென திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தில் ராஜா ராணி 2 தொடரில் உள்ள பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். தற்போது இந்த திருமண ஜோடிக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Also Read : எனக்கு மகாலட்சுமிக்கும் 21 வயசு வித்தியாசமா.? கல்யாணத்திற்கு பின் ரவீந்தர் அளித்த பேட்டி
