திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடுத்த ஆஸ்கர் அவருக்கு தான்.. ஏ ஆர் ரகுமான் புகழ்ந்து பாராட்டிய பிரபலம்

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுக்கு தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தன்னுடைய புதுமையான மற்றும் மெல்லிசையால் ரசிகர்கள் பலரையும் கட்டி போட்டிருக்கும் இவர் ஆஸ்கர் விருது உட்பட பல விருதுகளை வாங்கி தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித் தந்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் இசையமைத்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் அப்படத்தில் ஏ ஆர் ரகுமானின் இசை அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் அவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பற்றி கூறிய ஒரு கருத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Also read:முதன்முதலாக தேசிய விருது வாங்கிய இசையமைப்பாளர்.. இசைஞானி, ஏ ஆர் ரகுமானுக்கெல்லாம் இவர் தான் குரு

இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜாவுக்கு தமிழ் சினிமாவில் இளைஞர்கள் உட்பட ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் மீது ஏ ஆர் ரகுமானுக்கு தனிப்பிரியும் உண்டு. அதை அவரே பலமுறை மேடைகளில் தெரிவித்திருக்கிறார்.

சிறுவயதிலிருந்தே பைலட் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த யுவன் சங்கர் ராஜா ஏ ஆர் ரகுமானை பார்த்து தான் இசையமைப்பாளராக மாறினாராம். அன்றைய காலகட்டத்தில் இளையராஜாவிற்கு போட்டியாக பார்க்கப்பட்டவர் தான் ஏ ஆர் ரகுமான். அதை பார்த்த யுவன் ஏ ஆர் ரகுமானுக்கு போட்டியாக வளர வேண்டும் என்று இசைத்துறைக்கு வந்ததாக ஒருமுறை தெரிவித்து இருந்தார்.

Also read:ஏ ஆர் ரகுமான் தங்கச்சியை காதலித்து கழட்டி விட்ட பிரபலம்.. பகிரங்கமாக போட்டு உடைத்த பயில்வான்

இப்படி போட்டி மனப்பான்மையுடன் வந்திருந்தாலும் ஏ ஆர் ரகுமான் மீது யுவனுக்கு தனிப்பட்ட முறையில் அன்பும், மரியாதையும் இருக்கிறது. அந்த வகையில் ஏ ஆர் ரகுமானிடம் ஒரு முறை உங்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்கர் விருதை பெற தகுதியானவர்கள் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் யுவன் சங்கர் ராஜாவின் பெயரை கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நான் யுவனின் தீவிர ரசிகர் என்றும் கூறினார். இசைப்புயலின் வாயால் இப்படி ஒரு வார்த்தையை கேட்ட யுவனின் ரசிகர்கள் தற்போது மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

Also read:இளையராஜா பாஞ்சாயத்து கூட்டின 4 பெரும் புள்ளிகள்.. காதில் கூட கேட்காத ஏ ஆர் ரகுமான்

Trending News