வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தனலட்சுமியிடம் சிக்கிய அடுத்த பலி ஆடு.. குறும்படம் பார்க்காமலேயே ரெட் கார்ட் கொடுக்கப்போகும் ஆண்டவர்

விஜய் டிவியில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வாரம் தோறும் ஏதாவது ஒரு சண்டையை வைத்தே டிஆர்பியை எகிற வைத்து கொண்டிருக்கிறது. அந்த டிஆர்பிக்கு உதவியாக இருக்கும் போட்டியாளர் என்றால் அது நிச்சயம் தனலட்சுமியாகத்தான் இருக்க முடியும். சுலபமாக சரி செய்யக்கூடிய பிரச்சினையை கூட உலகப்போர் ரேஞ்சுக்கு மாற்றுவது தான் இவருடைய தந்திரம்.

அந்த வகையில் இவர் ஒவ்வொரு சம்பவத்தையும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தான் செய்கிறார். அதிலும் அசீம் உடன் சண்டை போடுவது இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. நன்றாக அவரை கோபப்படுத்திவிட்டு நைசாக இவர் கழண்டு விடுவார். ஆனால் இவரின் யுக்தி தெரியாமல் அசீம் கண்டபடி கத்தி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொள்வார். இதுதான் இத்தனை வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் நடந்தது. அதையே இந்த முறையும் பயன்படுத்தலாம் என்று நினைத்த தனலட்சுமிக்கு தொக்காக வந்து மாட்டிக் கொண்டவர் தான் மணிகண்டன்.

Also read : வாடி போடி, நீ என்ன பெரிய இவளா குழாயடி சண்டையாக மாறிய பிக்பாஸ் வீடு.. தனலட்சுமி டார்கெட் செய்த அடுத்த நபர்

இந்த வாரம் பிக் பாஸ் வீடு இனிப்பு தொழிற்சாலை ஆக மாறி இருக்கிறது. அதன்படி இரண்டு குழுவாக பிரிந்து இருக்கும் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கை செய்கின்றனர். வழக்கம் போல இந்த வாரமும் அடிதடி ஏற்படும் வகையிலான டாஸ்க் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பொம்மை டாக்கில் நடந்தது அனைவருக்கும் நினைவிருக்கும். அதேபோன்று இந்த டாஸ்கிலும் ஒருவருக்கொருவர் தள்ளிவிட்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருந்தனர். அதில் உச்சகட்டமாக இன்று தனலட்சுமி மற்றும் மணிகண்டன் இருவருக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது டாஸ்க்குக்கு தேவையான பொருட்களை பிக் பாஸ் அனுப்புவார்.

அதை இரண்டு டீமும் எப்படியாவது எடுக்க வேண்டும். இந்த போட்டியில் மணிகண்டன், தனலட்சுமியிடம் இருந்த பொருளை வலுக்கட்டாயமாக பிடுங்குகிறார். இதனால் தனலட்சுமி கீழே விழுந்து விடுகிறார். ஆனால் இதற்கு முன்பே கமல் சொன்னது போல போட்டி என்று வந்துவிட்டால் இது போன்ற தள்ளு முள்ளு இருக்கத்தான் செய்யும். அதற்கு ஆட்சேபிப்பவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளவே கூடாது என்று எச்சரித்து இருந்தார். ஆனால் அதைப் பற்றி யோசிக்காமல் தனலட்சுமி மணிகண்டன் தன்னை தள்ளி விட்டதை பற்றி பேசி ஒரு பெரிய சண்டையாக மாற்றி விட்டார். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் அவர் எதிரணியில் இருந்த பொருட்களை திருடினார். அது மட்டும் சரி என்றால் மணிகண்டன் நடந்து கொண்டதில் என்ன தவறு இருக்கிறது.

Also read : பிக்பாஸில் வெளியேறிய போட்டியாளருக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்.. எதுல போய் முடிய போகுதோ சிவசிவா!

மேலும் இந்த சண்டையில் அவர் போகிற போக்கில் அவன் இவன் என்றெல்லாம் வசைபாட ஆரம்பித்து விட்டார். ஏற்கனவே இவர் அசீமை இப்படித்தான் வம்பு பேசி சண்டையிட ஆரம்பித்தார். தன்னை அவன் இவன் என்று பேசியதால் மணிகண்டன் பதிலுக்கு எகிற ஆரம்பித்தார். உடனே தனலட்சுமி எல்லாம் கேமராவில் ரெக்கார்ட் ஆகி இருக்கும். என்னை அடிச்சிடுவியா முடிஞ்சா அடிச்சு பார் என்று எதிராளியை தூண்டி விட்டுக் கொண்டே இருந்தார். உடனே சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் இதை வைத்தே கமல் சாரிடம் என்னை மாட்டி விடலாம் என்று பார்க்கிறாயா என்று நைசாக எஸ்கேப் ஆனார்.

ஆனாலும் விடாத தனலட்சுமி சைக்கோ போல் கத்திக்கொண்டே இருந்தார். இது பார்ப்பவர்களுக்கு கடும் எரிச்சலை தான் கொடுக்கிறது. ஒருமுறை தனலட்சுமி மேல் தவறு இல்லாததால் ஆண்டவர் அவருக்கு சப்போர்ட் செய்தார். அதையே பிடித்துக் கொண்ட தனலட்சுமி தற்போது ஆடாத ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார். இதற்கு கமல்ஹாசன் இந்த வாரம் அவருடைய பாணியில் குட்டு வைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சண்டையில் இருவர் மீதும் தப்பு இருந்தாலும் தனலட்சுமியின் நடவடிக்கை வெறுப்பை சம்பாதித்துள்ளது. இதனால் ஆண்டவர் ரெட் கார்ட் கொடுத்தால்கூட தவறில்லை என்கின்றனர் நெட்டிசன்கள்

Also read : ஆண்டவரால் அப்சட்டான போட்டியாளர்.. மீண்டும் பழைய எனர்ஜியுடன் கம்பேக் கொடுத்து அசத்திய ரவுடி பேபி

Trending News