Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், இந்த காலத்து பசங்களை ஓவராக நம்பவும் கூடாது அதிகமாக சுதந்திரமும் கொடுக்க கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் பாண்டியனின் மகள் அரசி தான். அதாவது தன்னுடைய மகள் சின்னப்பிள்ளை, ரொம்ப விபரம் தெரியாது, குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணாக நடந்து கொள்வாள் என்று அரசி மீது ஓவராக பாண்டியன் நம்பிக்கை வைத்திருந்தார்.
ஆனால் கோமதிக்கு மட்டும் அரசி மீது அவ்வப்போது சந்தேகம் வந்த நிலையில் எல்லார் கண்களிலும் மண்ணை தூக்கிக்கொண்டு விரோதி குடும்பமான சக்திவேலுவின் மகன் குமரவேலுவை காதலிக்க ஆரம்பித்து விட்டார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட பாண்டியன் குடும்பம் சுக்கு நூறாக உடைந்து விட்டது. நான் வளர்த்த என் மகள் அரசியா இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார் என்று பாண்டியன் நிலைகுலைந்து போய்விட்டார்.
அத்துடன் கோமதியும், இத்தனை நாளாக எங்களை ஏமாற்றி உன் இஷ்டப்படி நடந்து கொண்டிருக்கிறாய்? இன்னும் என்னெல்லாம் எங்களிடமிருந்து மறைத்திருக்கிறாய் என்று போனை செக் பண்ண சொல்கிறார். அந்த வகையில் சரவணன், அரசி போனை வாங்கி எல்லாம் மெசேஜையும் பார்த்து, கொடுத்த கிப்ட்களையும் பார்த்து விடுகிறார்கள். அரசி இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார் என்று நம்ப முடியாத அளவிற்கு கிப்ட்டுகள், சேர்ந்து எடுத்த போட்டோக்கள், கொலுசு என அனைத்தையும் கோமதி கண்டுபிடித்து விட்டார்.
அது மட்டும் இல்லாமல் கையில் மோதிரம் போட்டு நிச்சயதார்த்தம் அளவிற்கு வரை இரண்டு பேரும் சென்றிருக்கிறார்கள் என்று கோபப்பட்ட கோமதி சினிமாவிற்கு மட்டும்தான் அவன் கூட போய் இருக்கியா இல்லனா வேறு எங்கேயும் போனியா என்று மொத்தமாக அரசி மீது நம்பிக்கை இழந்து போய் கேள்வி கேட்கிறார்.
அரசி காதலித்த விஷயத்தையே ஏற்றுக்கொள்ள முடியாத பாண்டியனுக்கு அடுத்த அதிர்ச்சியான விஷயம் இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள், மோதிரம், லவ் லெட்டர், கார்ட்ஸ் இதையெல்லாம் பார்த்ததும் எதுவும் பேச முடியாமல் நொந்து போய்விட்டார். வீட்டுக்கு தெரியாமல் சைலண்டாக இருந்து இந்த மாதிரியான விஷயங்களை அரசி செய்திருக்கிறார் என்று நம்ப முடியாத பாண்டியன் குடும்பம் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சினையை சமாளிக்க முடியாமல் அரசி நிலைகுலைந்து நிற்கும் பொழுது சுகன்யா மற்றும் குமரவேலுவின் பேச்சை கேட்டுக் கொண்டு யாருக்கும் தெரியாமல் கல்யாணத்தை பண்ணி பாண்டியன் தலையில் அடுத்த இடியை இறக்கப் போகிறார்.