பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்கள் இந்தியன் 2 க்கு முன் வரை இந்தியளவில் பெருமளவு எதிர்பார்க்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன. இந்தியாவில் உள்ள டாப் ஹீரோக்கள் அனைவரும் ஷங்கருடன் ஒரு படத்திலாவது இணைய வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கின்றனர்.
ஆனால், இந்தியன் 2 படத்தின் திரைக்கதை மற்றும் காட்சியமைப்பு, இசை உள்ளிட்டவை பெரும் சொதப்பலாக இருந்ததால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இது ஷங்கரின் கேரியலில் பெரிய இடியாக அமைந்தது. தற்போது ராம்சரணை வைத்து கேம்சேஞ்சர் படத்தை இயக்கி வரும் நிலையில், இப்பத்தின் 2 வது சிங்கில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது எனவும், இப்படம் வரும் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படம் இரண்டு ஆண்டுகளாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், விரைவில் இப்பத்தின் பணிகளை முடித்துவிட்டு அடுத்து அவரது கனவுப் படமான வேள்பாரியை படமாக்க உள்ளார். சு.வெங்கடேசன் எம்பி எழுதிய வேள்பாரி வாசகர்கள் மத்தியிலும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தை பாகுபலி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை விட பிரமாண்டமாக எடுக்கவுள்ளார் ஷங்கர்.
எனவே இப்படத்தில் ரண்பீர் கபூர், யாஷ், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் ஹீரோக்களாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தமிழ் நடிகர்களையே ஷங்கர் தேர்வு செய்துள்ளார். அதன்படி, விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் இப்படத்தில் ஹீரோக்களாக ஒப்பந்தம் செய்துள்ளார் ஷங்கர்.
ஏற்கனவே அந்நியன், ஐ ஆகிய படங்களில் விக்ரமுடன் ஷங்கர் பணியாற்றிய நிலையில், முதல் முறையாக சூர்யாவுடன் இப்படம் மூலம் இணையவுள்ளார் ஷங்கர். ஜென்டில்மேன் முதல் 2.0 வரை இத்தனை ஆண்டுகள் அவர் தன் ஒவ்வொரு படத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நிலையில், இந்தியன் 2-ல் சற்று சரிவை சந்தித்தாலும், மீண்டும் கேம் சேஞ்சரில் மீண்டு வந்து, வேள்பாரியில் எல்லோரையும் பிரமிக்க வைப்பார் என கூறப்படுகிறது.
சமீபத்தில் வேள்பாரி நாவலில் இருந்து சிலவற்றை அனுமதியின்றி பிரபல நடிகரின் படத்தில் பயன்படுத்தியதாக ஷங்கர் குற்றம்சாட்டியிருந்த நிலையில் அந்த நாவலில் கதையை படமாக்கும் உரிமையை வைத்துள்ள அவர் அதற்கான நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் விக்ரம், ஷங்கர், சூர்யா ஆகிய மூவர் கூட்டணி இணைந்தால் அது அடுத்த கட்ட த்திற்கு சினிமாவை கொண்டு செல்லும் என இப்போதே ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஆனால் ஷங்கர் தனது பழைய பார்முலாவை தூக்கி எறிய வேண்டும் எனவும் ரசிகர்கள் பலரும் கூறுகிறார்கள்.
மேலும் வேள்பாரி படம் சரித்திர படமாக உருவாக உள்ளதால் இப்படம் 3 பாகங்களாக உருவாகவுள்ளதாகவும், விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிதாமகன் படத்தில் விக்ரம்,சூர்யா இணைந்து நடித்த நிலையில் இவர்கள் இணையும் இப்படமும் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.