வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முரளி குடும்பத்திலிருந்து உருவாகும் அடுத்த ஹீரோ.. அஜித் பட ஹிட் இயக்குனரால் பொறாமையில் அதர்வா

Actor Atharva: டாப் நடிகர்களின் பட்டியலில் முரளி இல்லை என்றாலும் அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் அப்போது இருந்தது. பல ஹிட் படங்களை கொடுத்த முரளியின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பாக அமைந்தது. இந்நிலையில் தனது மகன் அதர்வா முரளியையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துவிட்டு தான் முரளி மரணித்தார்.

பானா காத்தாடி என்ற படத்தில் மூலம் அறிமுகமான அதர்வா சில ஹிட் படங்களை கொடுத்தார். ஆனால் அதன் பின்பு சற்று தலைக்கனம் ஏறிக்கொள்ள பலரையும் அவமதிக்க தொடங்கினார். அதோடு மட்டுமல்லாமல் படப்பிடிப்புக்கும் அவர் தாமதமாக வந்ததால் தயாரிப்பாளரின் எதிர்ப்பை சம்பாதித்தார்.

Also Read : சத்தமே இல்லாமல் வேறு படத்தை எடுக்கும் அஜித்.. விடாமுயற்சிக்கு எப்போது தான் விடிவு காலம்

இந்த சூழலில் அதர்வாவுக்கு பட வாய்ப்புகளை இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் முரளி குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசும் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். அதாவது முரளியின் மகன் மற்றும் அதர்வாவின் சகோதரரான ஆகாஷ் முரளி அஜித் பட இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார்.

அதாவது அஜித்தின் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய பில்லா படத்தை இயக்கியவர் விஷ்ணுவரதன். இதைத்தொடர்ந்து ஆரம்பம் படத்திலும் இவர்கள் வெற்றி கூட்டணி இணைந்து இருந்தது. மீண்டும் எப்போது அஜித் கூப்பிடுவார் என்று காத்துக் கொண்டிருக்கும் விஷ்ணுவர்தன் தனது அடுத்த படத்தை இப்போது எடுத்து வருகிறார்.

Also Read : ஒரே இரவில் என்ன வேணாலும் நடக்கலாம்.. ஜெய் பீம் மணிகண்டன்-அதர்வா கூட்டணியில் உருவான மத்தகம் டீசர்

இதில் கதாநாயகனாக ஆகாஷ் முரளி மற்றும் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான மாவீரன் படத்தில் கதாநாயகியாக அதிதி நடித்திருந்தாலும் அவருக்கு சில காட்சிகள் மட்டுமே கொடுத்திருந்தனர். இதனால் அவருக்கு எந்த ஸ்கோப்பும் கிடைக்காத நிலையில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இந்த படத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுக்கலில் நடந்து வருகிறது. வந்த சுவடே தெரியாமல் அதர்வா சினிமாவில் மார்க்கெட் இழந்த நிலையில் இப்போது அவரது சகோதரருக்கு அஜித் பட இயக்குனர் கிடைத்துள்ளார் என்ற பொறாமையில் இருக்கிறாராம். ஆனால் ஆகாஷ் முரளியாவது நிதானமாக செயல்பட்டு தனது தந்தையின் பெயரை காப்பாற்ற வேண்டும் என முரளி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Also Read : அதிதி ஷங்கருக்கு கொடுத்த பெரிய டிமிக்கி.. அல்வாவோட மகிமை தெரியாமல் அறியா பிள்ளை எல்லாத்தையும் நம்புது

Trending News