வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சூப்பர் ஸ்டார் குடும்பத்திற்கு வந்த அடுத்த வாரிசு.. யாரு சார் அந்த வணங்காமுடி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வரை மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் இவர்களது விவாகரத்து செய்தியால் ரஜினி மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் இவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

Also Read :பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை வசூலித்த 9 முன்னணி நடிகர்கள்.. ரஜினியின் இடத்தை பிடித்த விஜய்

இதையடுத்து தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ஆனால் இந்த தம்பதியினருக்கு தேவ் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவரிடம் சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது எங்களுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி  என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். அதாவது சௌந்தர்யாவின் கணவர் விசாகன் அவரின் குடும்ப பெயரான வணங்காமுடி என்பதை குறிப்பிட்டுள்ளார். இதனால் சௌந்தர்யா ரஜினிகாந்த் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

soundarya-rajinikanth

Also Read :ரஜினியுடன் மீண்டும் சேரப்போகும் தனுஷ்.. இளையராஜா போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆகுமா

இதன் மூலம் ரஜினிகாந்த் நான்காவது முறையாக தாத்தாவாகியுள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் குடும்பத்திற்கு அடுத்த வாரிசு வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஜெயிலர் படத்தின் அப்டேட்டுக்காகவும் அவர்கள் காத்திருக்கின்றனர்.

Also Read :ரஜினியை அலற விடப்போகும் ஜெய்.. நெல்சன் கொடுத்த புதிய தைரியம்

Trending News