
Gossip: மற்ற ஹீரோயின்கள் போல் இல்லாமல் தன்னை கெத்தாக காட்டிக் கொள்ள நம்பர் நடிகை என்ன வேண்டுமானாலும் செய்வார். அதை சமீப காலமாக சோசியல் மீடியாவில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஒல்லி நடிகர் மீது இருந்த கடுப்பை அவர் வெளிப்படுத்திய விதமே அவருடைய குணத்தை அம்பலப்படுத்தியது. அதிலும் அந்த தயாரிப்பாளர் திருமணத்தில் நடிகை நடந்து கொண்டது முகம் சுளிக்க வைத்தது.
அதையடுத்து பட்டத்தை தூக்கி எறிந்து நல்ல பேர் வாங்க பார்த்தார். அதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை. இருந்தாலும் சோசியல் மீடியாவில் கவனம் பெற நடிகை தொடர்ந்து சில பல வேலைகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
நம்பர் நடிகையின் ஆட்டம்
இந்த சூழலில் நடிகை செய்த வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி உள்ளது. சமீபத்தில் நடிகையின் கணவர் அரசாங்க சொத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்தார்.
எல்லாம் நடிகையின் திட்டம்தான். ஆனால் இதை ஊரே கேலி பேசி சிரித்தது. ஆனால் நடிகையின் தரப்பில் விழா நடத்த தான் பேச்சுவார்த்தை நடந்தது என சமாளித்தார்கள்.
ஆனால் இப்போது அது அனைத்துமே பொய் நடிகை பண திமிரில் இப்படி செய்திருக்கிறார் என்ற விஷயம் அம்பலமாகியுள்ளது.
ஏற்கனவே சோசியல் மீடியாவில் நடிகையின் பெயர் டேமேஜ் ஆகி இருக்கிறது. அதில் இந்த விவகாரமும் வெளியே வந்ததில் மானம் காற்றில் பறந்துள்ளது.