திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லோகேஷுக்கு அடித்த ஜாக்பாட்.. கதைய யோசிக்க சன் பிக்சர்ஸ கொடுக்கும் ரூம் வாடகை?

Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை முடித்த கையோடு அடுத்ததாக ரஜினி படத்தை எடுப்பதற்கான பணியில் இறங்கி இருக்கிறார். லியோ படம் ஓரளவு கலவையான விமர்சனங்களை பெற்றதால் சிறு சருக்களை லோகேஷ் சந்தித்தாலும் அதன் மூலம் அடுத்த படத்தில் இது நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தான் தலைவர் 171 படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தால் பெரும் தொகை சன் பிக்சர்ஸ் கிடைத்திருந்தது. ஆகையால் மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தான் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் கலாநிதி மாறன் உறுதியாக இருந்து வருகிறார்.

லோகேஷுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டை சன் பிக்சர்ஸ் பரிசாக கொடுத்திருக்கிறது. அதாவது ரஜினி படத்தின் கதை எழுதுவதற்காக பிரம்மாண்ட ஹோட்டல் ரூம் ஒன்றை செய்து கொடுத்திருக்கிறார்களாம். அதுவும் எப்படிப்பட்ட ரூம் என்றால் பெசன்ட் நகர் பீச்சை பார்த்த மாதிரி இருக்குமாம்.

Also Read : லோகேஷ்க்கு லியோ காட்டிய பயம்.. தலைவர் 171 படத்தில் எடுக்கும் புது முயற்சி

ஆகையால் ஒரு நல்ல மன நிறைவுடன் கதையை எழுத ஏதுவாக இருக்கும். எனவே தரமான சம்பவத்துடன் தலைவர் 171 படம் இருக்கவுள்ளது. அந்த ரூமின் வாடகையை கேட்டால் தலையை சுற்ற வைக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 3.2 லட்சம் ரூபாய் வாடகை மட்டுமாம்.

இதுதவிர லோகேஷுக்கு எல்லா வசதியையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் செய்து கொடுத்திருக்கிறது. ஆகையால் முழுவீச்சுடன் இந்த வேலையை செய்யும் பணியில் லோகேஷ் இறங்கி இருக்கிறார். மேலும் இந்த படத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாரி இறைக்க சன் பிக்சர்ஸ் தயாராக இருக்கிறது.

Also Read : மன்சூர் அலிகான் செய்த காரியத்தால் லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு.. லியோவில் நடிக்க வைத்து தான் பெரிய தவறு

Trending News