சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

திடீர்னு எல்லா படங்களிலும் பட்டையை கிளப்பும் பழைய ஹீரோ.. சூர்யா படத்திலும் நடிக்குமாறு வந்த அழைப்பு

Old Hero Showing Mass In Second Innings: இப்போது உள்ள முன்னணி ஹீரோக்கள் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ள படாத பட்டு வருகிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் ஹீரோவாக இருந்த சில நடிகர்கள் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் சத்யராஜ், நாசர் போன்ற பிரபலங்கள் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

ஆனால் இவர்களையே ஓரம் கட்டும் அளவிற்கு இப்போது கட்டுமஸ்தான ஹீரோ ஒருவர் கலக்கி வருகிறார். இப்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் அவர்தான் நடித்து வருகிறார். தனது அசுரத்தனமான நடிப்பால் செகண்ட் இன்னிங்ஸில் பட்டையை கிளப்பி வருகிறார்.

Also Read : விருப்பம் இல்லாமல் அசின் ரிஜெக்ட் செய்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. சூர்யாவுடன் நடிக்க மறுத்த காரணம்

அதாவது செகண்ட் ஹீரோ, வில்லன் என எது கொடுத்தாலும் தற்போது பின்னி பெடல் எடுத்து வருகிறார் நடிகர் சரத்குமார். அந்த காலத்தில் ரஜினி, கமல் போல் இல்லை என்றாலும் தனக்கான ரசிகர் கூட்டத்தை சரத்குமார் பெற்றிருந்தார். இந்நிலையில் இப்போது படங்களில் மாஸ் காட்டி வருகிறார்.

வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் வேற லெவலில் வரவேற்பை பெற்றது. அதுவும் பல பிரபலங்கள் சரத்குமாரை பாராட்டி தள்ளி இருந்தனர். அந்த அளவுக்கு தத்ரூபமான நடிப்பை வெளிகாட்டி இருந்தார்.

Also Read : இனிமே சின்ராச கையில பிடிக்கவே முடியாது.. சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் 2-வுக்கு தயாராகும் சரத்குமார்

இந்நிலையில் இப்போது பாலிவுட் படத்தில் சரத்குமாருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அதாவது சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தின் இயக்குனர் சுதா கொங்குரா ஹிந்தியில் இப்படத்தை எடுத்து வருகிறார்.

சூர்யாவின் 2d என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவே சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்போது இதே படத்தில் நடிக்க சரத்குமாரை படக்குழு அணுகியுள்ளனர். இவ்வாறு கோலிவுட்டை தாண்டி பாலிவுட் வரை சரத்குமாருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கிறது.

Also Read : சித்தார்தின் டக்கரை பின்னுக்கு தள்ளிய சரத்குமார்.. 2வது நாள் வசூலில் அதிரடி காட்டும் போர் தொழில்

Trending News