செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சினிமாவில் ஈகோ பார்க்காத ஒரே நடிகர்.. சத்யராஜ் உடன் பட்டையை கிளப்பிய காம்போ

Actor Manivannan: தனக்கு கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாயினும், அதை தத்ரூபமாக நடிக்கும் தன்மை கொண்டவர் சத்யராஜ். மேலும் இவர் நகைச்சுவையில் சிறப்பு ஊட்டும் வகையில் மேற்கொண்ட எண்ணற்ற படங்களில் இவருடன் இணைந்து கலக்கிய ஈகோ பார்க்காத நடிகரைப் பற்றிய சில தகவல்களை இங்கு காணலாம்.

மக்கள் நெஞ்சில் கட்டப்பாவாய் இடம் பிடித்த சத்யராஜ் ஆரம்ப காலத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட படங்களில் ஒன்றுதான் அமைதிப்படை. இவரின் குசும்பு நகைச்சுவைக்கு இணையாக களமிறங்கியவர் தான் மணிவண்ணன்.

Also Read: ஒரே படத்தில் இணைந்து நடித்து திருமணம் செய்து கொண்ட 6 ஜோடி.. சினேகாவின் மீது காதல் வலையில் விழுந்த பிரசன்னா

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட மணிவண்ணன் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 படங்களை இயக்கியும் உள்ளார். பெரும்பாலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி கண்டது.

அவ்வாறு 1997ல் மணிவண்ணன் இயக்கி, நடித்த படம் தான் அமைதிப்படை. இப்படத்தில் இரு வேடத்தில் சத்யராஜ், ரஞ்சிதா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இவர் இயக்கத்தில் இப்படம் 25 வாரம் ஓடி ப்ளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது. அதிலும் குறிப்பாக சத்யராஜ் அரசியல் பரிமாணத்தில் இடம்பெறும் காட்சிக்கு உறுதுணையாக செயல்பட்ட இவரின் நடிப்பு பெருதளவு பேசப்பட்டது.

Also Read: 20 ஆயிரம் கடன் கொடுக்க முடியல இப்ப 100 கோடி வருமானம்.. வியக்க வைத்த எம்.எஸ்.வி மகளின் பிசினஸ்

மேலும் இப்படத்திற்கு பிறகு வில்லாதி வில்லன், மாமன் மகள், தாய்மாமன், சேனாதிபதி, புது மனிதன் போன்ற படங்கள் இவர்கள் இருவரின் கூட்டணியில் வெற்றி கண்டது. மேலும் தன் படபிடிப்பின் போது யாரிடமும் கடுமையாக நடந்து கொல்லாத ஒரு எளிமையான இயக்குனராக இருந்துள்ளார் மணிவண்ணன். எந்த ஒரு டென்ஷனிலும் தன் தன்மையை விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவர்.

தான் இயக்கும் படங்களில் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதை பார்க்க வருவோரிடம் எந்த ஒரு முக சுலிப்பைக் காட்டாதவர். சினிமாவிற்கு பல உதவிகளை செய்து கொடுத்த இவர் எந்த ஒரு தருணத்திலும் ஈகோவை வெளிக்காட்டாத சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்த இவரை இந்த திரையுலகம் இழந்து நிற்கிறது.

Also Read: கவிஞரை செருப்பால் அடித்த எம்ஜிஆர்.. பழகிய பாவத்திற்கு இப்படியெல்லாமா அசிங்கப்படுத்துவது ?

Trending News