திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித் போல விருதுகளையும், ரசிகர்களையும் புறக்கணித்த ஒரே நடிகர்.. புடிச்சா படம் பாரு புடிக்கல போங்கடா.!

Actor Ajith: ஆரம்பத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்த அஜித் ஒரு கட்டத்திற்கு மேல் இதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார். இதற்கு காரணம் பத்திரிக்கையாளர்களிடம் ஏதாவது பேசினால் அது சர்ச்சையாக வெடிக்க ஆரம்பித்தது. அதேபோல் தனது ரசிகர் கூட்டத்தையும் அஜித் ஒரு கட்டத்திற்கு மேல் கலைத்து விட்டார். தன்னுடைய படத்திற்கும் ப்ரோமோஷன் செய்ய மாட்டார்.

அதோடுமட்டுமல்லாமல் விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். இவ்வாறு தன்னுடைய சொந்த வாழ்க்கையை மிகவும் மறைமுகமாக வைத்துக்கொள்ளும் அஜித் ரசிகர்களிடம் ஒதுங்கி இருக்கிறார். இவருக்கு முன்னதாகவே விருதுகள் மற்றும் ரசிகர்களை புறக்கணித்த ஒரு நடிகர் இருக்கிறார்.

Also Read : இயற்கை குறைபாடுகளை மையப்படுத்தி வெளிவந்த 5 அஜித் படங்கள்.. உடலை குறைத்து பெண்ணாகவே மாறிய வரலாறு

அதாவது ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவையே தனது கட்டுக்குள் வைத்திருந்தவர் தான் நடிகர் கவுண்டமணி. அவரிடம் இருக்கும் குணங்கள் எந்த நடிகருக்கும் இதுவரை இருந்ததில்லை. இன்றுவரை கவுண்டமணி அப்படியேதான் வாழ்ந்து வருகிறார். விருது கொடுத்தாலும் எனக்கு எதுக்கு விருது என்று கேட்பாராம்.

அதுமட்டுமின்றி ரசிகர்களால் நான் இல்லை. நான் நன்றாக நடித்தால் ரசிகர்கள் என்னை பார்ப்பார்கள். இல்லையென்றால் அவர்கள் என்னை பார்க்க மாட்டார்கள் என தெளிவாக பேசுவாராம். மேலும் ரசிகர் மன்றம் என்று சொன்னாலே கவுண்டமணிக்கு பிடிக்கவே பிடிக்காதாம். தொலைக்காட்சிகளுக்கும் கவுண்டமணி பேட்டி கொடுத்ததில்லையாம்.

Also Read : இப்படியே போனா வேலைக்கு ஆகாது.. அடுத்தடுத்த 2 படங்களின் இயக்குனர்களை அறிமுகம் செய்யும் அஜித்

மேலும் படத்தை பிடித்தால் பாருங்கள் இல்லையா போங்கடா என்று கவுண்டமணி வெளிப்படையாகவே பேசுவாராம். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் படப்பிடிப்பில் வா போ, இல்லையென்றால் வாடா போடா என்று உரிமையுடன் பேசக்கூடியவர். ரஜினி, கமல் கால்ஷீட்டை விட கவுண்டமணியின் கால்ஷீட் கிடைப்பது அந்த காலத்தில் பெரிதாக இருந்தது.

ஆனாலும் தான் நடித்த நடிப்புக்கு விருது வேண்டாம் என்று தற்பெருமை இல்லாத நடிகராக அப்போது மட்டும் இன்றி தற்போது வரை வாழ்ந்து வருகிறார். காமெடியனாக நடித்து ஹிட் படங்களை கொடுத்த கவுண்டமணியால் ஹீரோவாக வெற்றி படங்களை கொடுக்க முடியவில்லை. ஆனாலும் தமிழ் சினிமாவில் காலம் கடந்த இவரது பெயர் சொல்லும் அளவுக்கு படங்களை கொடுத்திருக்கிறார்.

Also Read : சுப்பிரமணியபுரம் கொடுத்த தைரியம், ரீ-ரிலீஸ்காக வரிசை கட்டி நிற்கும் 5 படங்கள்.. அடி போளி அஜித் கூட லிஸ்ட்ல இருக்காரே

Trending News