சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் ஹீரோக்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். ஏனென்றால் ஒரு படம் ஹிட்டானாலே தங்கள் சம்பளத்தை அதிகபடியாக உயர்த்துகிறார்கள். இதனால் படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் ஹீரோக்களின் சம்பளம் அதிகமாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் எப்போதுமே ஹீரோக்களுக்கு ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் என்று பேசப்படுகையில் காமெடி நடிகர்களுக்கு என்றால் ஒரு நாளைக்கு இவ்வளவு என நிர்ணயிப்பார்கள். ஹீரோக்களுக்கு கால்ஷீட் 50 நாட்கள் கொடுத்தால் காமெடி நடிகர்களுக்கு 15 நாள் போதும்.
Also Read :வடிவேலு, சந்தானம் எடுத்த பிரேக்.. அதிர்ஷ்ட மழையில் நனையும் ஒரே காமெடி நடிகர்
ஆனால் நாள்தோறும் காமெடி நடிகர்கள் சம்பளம் வாங்கிக் கொள்வார்கள். தற்போது சந்தானம், வடிவேலு, சூரி போன்றோர் கதாநாயகனாக நடிப்பதால் காமெடி நடிகர்களுக்கு தட்டுப்பாடு வந்துள்ளது. அதுமட்டுமின்றி சமீப காலமாக வெளியாகும் எல்லா படங்களிலும் யோகி பாபு தான் காமெடி நடிகராக வலம் வருகிறார்.
அந்த வகையில் தற்போது காமெடி நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர் யோகி பாபு தான். ஆனால் அந்த காலத்திலேயே ஹீரோக்களை விட ஒரு காமெடி நடிகர் அதிக சம்பளம் வாங்கி உள்ளார். அதாவது சரத்குமார், பிரபு போன்ற நடிகர்களை விட இவருக்கு சம்பளம் அதிகமாம்.
இந்த ஹீரோக்கள் 30 லட்சம் சம்பளம் வாங்கும் போது நகைச்சுவை நடிகர் கவுண்டமணி 35 லட்சம் சம்பளமாக வாங்கி உள்ளார். ஏனென்றால் அப்போது கவுண்டமணி காமெடிக்கு அவளது டிமாண்ட் இருந்தது. அப்போது உள்ள தயாரிப்பாளர்கள் முதலில் கவுண்டமணியின் கால்ஷீட் வாங்கிய பிறகு தான் ஹீரோக்களிடமே கால்ஷீட் வாங்குவார்கள.
அதிலும் கவுண்டமணி, செந்தில் இணையான காமெடி காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றவுடன் தொடர்ந்து இவர்களது காம்போவில் படம் வெளியாக ஆரம்பித்தது. மேலும் ஹீரோக்களை விட ஒரு காமெடி நடிகருக்கு படங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்றால் அதுவும் கவுண்டமணிக்கு தான்.
Also Read :கவுண்டமணி கூட்டணியில் வெற்றியடைந்த 5 ஹீரோக்கள்.. செந்தில் மார்க்கெட்டை இறக்கிவிட்ட சத்யராஜ்