Samuthirakani: சினிமாவில் நடிகர்களை தூக்கிக் கொண்டாடும் ரசிகர்கள் சில கேரக்டர் ஆர்டிஸ்ட்களையும் தூக்கி கொண்டாடுகிறார்கள். அதில் சமுத்திரக்கனி குணச்சித்திர கேரக்டராகவும், நல்ல தரமான படங்களை இயக்குவதில் சிறந்த இயக்குனராகவும் முத்திரை பதித்திருக்கிறார்.
அப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் வாய்ப்பைத் தேடி அலைந்து கொண்டு சிறு சிறு கேரக்டர்களிலும் நடித்து சினிமாவிற்குள் நுழைந்து இருக்கிறார். அப்படி இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன் வாய்ப்புக்காக பல இயக்குனரிடம் கேட்டு கெஞ்சி இருக்கிறார்.
ஆனால் அப்பொழுது சமுத்திரக்கனியை கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லை. அதன் பிறகு அவருடைய திறமையை முன்னுறுத்தி காட்டி படிப்படியாக முன்னேறி தற்போது அனைவரும் தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு ஒரு குணசித்திர ஆர்டிஸ்ட் ஆக வளர்ந்து நிற்கிறார்.
இதனால் இவருடைய நடிப்பு பல இடங்களில் பேசப்பட்டு வருவதால், எந்த இயக்குனர் 28 வருடங்களுக்கு முன் வாய்ப்பு கொடுக்க மறுத்தாரோ அவர் சமுத்திரக்கனியை தேடி போய் வாய்ப்பு கொடுத்து வருகிறார். அவர் வேறு யாருமில்லை பிரம்மாண்ட படங்களை இயக்குவதில் வல்லமை படைத்த இயக்குனர் சங்கர் தான்.
சமுத்திரக்கனியை நிராகரித்த இயக்குனர்
அதாவது 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படத்தில் சமுத்திரக்கனி ஒரு கேரக்டரில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறார். அப்பொழுது சங்கர் இவரை கொஞ்சம் கூட கண்டுக்கவில்லை. அத்துடன் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் இவர் பெயரைக் கூட வாசிக்கவில்லை.
ஆனால் இப்பொழுது இந்தியன் 2 படத்தை எடுக்கும் பொழுது இந்த குறிப்பிட்ட கேரக்டர் உங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என சமுத்திரகனியை தேடி போய் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். இந்த படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து மிரண்டு போன சங்கர் தெலுங்கில் எடுக்கும் கேம் சேஞ்சர் படத்திலும் ஒரு வாய்ப்பு கொடுத்து கூடவே கூட்டிட்டு வருகிறாராம்.
இதை தான் சொல்வார்கள் யார் நம்மளை வேண்டாம் என்று ஒதுக்கினார்களோ, அவர்கள் முன்னாடி நாம் வளர்ந்து நிற்க வேண்டும் என்று. அது சமுத்திரக்கனி விஷயத்தில் சரியாகவே பொருந்தி இருக்கிறது என்றே சொல்லலாம். நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் ஒரு நாளில் வெற்றி கிடைக்கும்.