சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் அமிதாப்பச்சன் இவர்கள் மூவரும் நடிப்பில் உச்சத்தில் இருக்கும் ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகின்றனர். அதிலும் ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் இணைந்து ஒரு சில படங்களில் நடித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் ஹிந்தியிலும் அமிதாப்பச்சன் உடன் ஒரு படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் மகத்தான சாதனையை படைத்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவர்கள் மூவரும், ரசிகர்கள் மத்தியில் தாங்கள் நடிக்கும் படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார்கள். இவர்களுக்கு என்று தனித்தனி ரசிகர் கூட்டம் உருவான நிலையில் ஒருவருக்கொருவர் இணைந்து நடிப்பதை நிறுத்திவிட்டனர். அதன் பிறகு இவர்கள் தனித்தனியாக தாங்கள் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தி வந்தனர். பின்னர் கடின உழைப்பின் மூலம் தங்களுக்கான படங்களில் பிஸியாக நடித்து புகழின் உச்சம் தொட்டனர்.
Also Read: விக்ரம் 2வை எதிர்பார்த்த கமலுக்கு வந்த சிக்கல்.. எல்லா இடத்திலும் மேயும் லோகேஷ் கனகராஜ்
அப்படியாக இவர்கள் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து உச்சத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த மூன்று ஜாம்பவான்களும் சேர்ந்து ஹிந்தி படத்தில் நடித்துள்ளனர். அதிலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. அதிலும் அன்றைய வருடம் வெளியான படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படங்களின் சாதனை வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பிரயாக் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜிராப்டார். இப்படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமலஹாசன், மாதவி, பூனம் தில்லான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் ரஜினிகாந்த் ஹூசேன் என்னும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.
Also Read: தடுமாற வைத்து வேடிக்கை பார்த்த அம்மையார்.. சூடு பிடிக்க களமிறங்கிய கமல்
மேலும் கமலஹாசன் கிசான் குமார் கண்ணா என்னும் ரோலில் அமிதாபச்சனின் சகோதரராக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய இவர் இப்படத்தில் கரன்குமார் கிஷான் என்னும் கதாபாத்திரத்தில் ரவுடி கும்பலை வேட்டையாடும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக மாஸ் காட்டி இருப்பார். ஆனால் இன்று வரையிலும் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆக இருந்த வருகின்றனர்.
தற்பொழுது சினிமா திரையுலகில் டாப் ஹீரோக்களாக இருக்கக்கூடிய ரஜினி, கமல், அமிதாப் பச்சன் இவர்களது கூட்டணியில் வெளியான ஹிந்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனை அடுத்து வருங்காலத்தில் இதுபோன்று மாஸ் ஹீரோக்களாக இருக்கக்கூடிய, இவர்களது நடிப்பில் மீண்டும் இணைந்து நடிக்கும் படங்கள் வெளிவருமா என்பது சந்தேகம்தான்.
Also Read: இழுத்துக் கொண்டே போகும் ஜெயிலர்.. டென்ஷன் பண்ணும் ரஜினி, குழப்பத்தில் நெல்சன்