திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

உதயநிதிக்கு நல்ல பிசினஸ் கொடுத்த ஒரே படம் .. நடித்த 17 படத்தில் கெத்து காட்டிய வசூல்

உதயநிதி நடிகராக சினிமாவிற்குள் நுழைந்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை எந்தவித இடைவெளியும் எடுக்காமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெளியிட்டுள்ளார். அதுவும் இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எப்படி என்றால் எந்த மாதிரி நடித்தால் அது செட் ஆகும் என்று தெரிந்து அதற்கேற்ற மாதிரியே கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கில்லாடி ஆனவர்.

இவர் தமிழ் சினிமாவுக்கு 2009இல் சூர்யா நடித்து வெளிவந்த ஆதவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அறிமுகமானார். பின்பு பல இயக்குனர்கள் இவரை பார்த்து ஹீரோக்கு செட்டாகுவார் என்று இவரை தேடிப் போய் நடிப்பதற்கு கேட்டிருக்கிறார்கள். அதற்கு இவர் ஒரு படத்தில் நடித்துப் பார்ப்போம் மக்கள் ஏற்றுக் கொண்டால் அதன் பின் தொடர்ந்து நடிக்கலாம் என்று முடிவு செய்து நடித்த படம் தான் ஒரு கல் ஒரு கண்ணாடி.

Also read: மொத்தமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உதயநிதி.. அமைச்சர் ஆனாலும் விட்டுக் கொடுக்க முடியாது

இந்த படம் சந்தானத்துடன் சேர்ந்து பெரிய அளவில் வெற்றி படமாக மாறியது. அத்துடன் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதையும் கைப்பற்றினார். இப்படி தொடர்ந்து 17 படங்களிலும் நடித்து வசூல் சாதனையில் கெத்தாக வந்தார். இப்படி இருக்கையில் திடீரென்று இவர் 2023 ஆம் ஆண்டு கடைசியாக நடித்து என் நடிப்பை நிறுத்திக் கொள்ளப் போகிறேன் என்று அறிவித்துவிட்டார்.

ஆனால் இந்த வருடம் இவருக்கு இரண்டு படங்கள் வெளிவர இருக்கிறது. அதில் கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் நாளை ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ளது. இப்படம் க்ரைம் திரில்லர் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கு. இதில் இவருடன் சேர்ந்து ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பூமிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை மாறன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

Also read: உதயநிதியுடன் மோதிப் பார்க்கும் வாத்தி, இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்.. மீண்டும் ஓடிடி-யில் மார்க்கெட்டை ஏத்தும் தனுஷ்!

அடுத்ததாக இவர் நடிப்பில் கடைசி படமாக உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் தான் மாமன்னன். இப்படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவீனா ரவி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இது ஒரு அரசியல் நிறைந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் தான் கடைசியாக நடிக்க இருக்கும் படம் என்று கூறி இருக்கிறார். ஆனால் இவர் நடித்த படங்களிலே இந்த படம் நல்ல பிசினஸ் ஆகி உள்ளது. அதாவது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் 23 கோடிக்கு வாங்கி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் மாரி செல்வராஜ் தான். ஏனென்றால் அவர் இயக்கிய படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன் இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இப்பொழுது இவர் இயக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Also read: எல்லா கொலைகளுக்கு பின் அழுத்தமான காரணம் இருக்கும்.. மிரட்டும் உதயநிதியின் கண்ணை நம்பாதே ட்ரெய்லர்

Trending News