கோலிவுட்டின் தேசிய விருதுகளின் நாயகனாக பார்க்கப்படும் இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று, 70 வருடங்களாக இப்போதும் தமிழ் சினிமாவை போற்றப்படும் ஒரே படத்தை குறிப்பிட்டு பெருமையுடன் பேசி இருக்கிறார்.
2011-ம் ஆண்டு ஆடுகளம் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றதுடன் இந்த படத்திற்காக பெற்ற இயக்குனர் வெற்றிமாறன், மொத்தமாக இந்த படத்திற்கு மட்டும் 6 தேசிய விருதுகளை பல்வேறு பிரிவுகளின் கீழ் பெற்றார். அந்தப் படத்தை தொடர்ந்து காக்கா முட்டை படத்திற்காக சிறந்த குழந்தை திரைப்படத்திற்கான 2-வது தேசிய விருது கிடைத்தது.
Also Read: ரொம்ப நாள் கோபத்தால், சிவாஜியை மூக்கில் ரத்தம் வர அடித்த நடிகை.. கைதட்டி பாராட்டிய இயக்குனர்
அதை தொடர்ந்து விசாரணை படத்திற்கும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றார். அதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி தேசிய விருது நாயகனாகவே பார்க்கப்படும் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் சமூகம் சார்ந்த படங்களை இயக்குவதில் அதிக நாட்டம் கொண்டவர்.
ஆகையால் ஒரு இயக்குனராக அவர் பெரும் இன்ஸ்பிரேஷன் ஆக பார்க்கப்படுவது 1952 ஆம் ஆண்டு மு கருணாநிதி வசனம் எழுதி, கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பராசக்தி படம் தானாம். இந்தப் படத்தில் பசி கொடுமை, சமூகத்தில் நிலவும் சுரண்டல்கள், கைம்பெண்களுக்கு ஏற்படும் அவலம் போன்றவற்றை வெளிப்படுத்தி இருப்பார்கள்.
Also Read: 2 கோடிக்கு ஆசைப்பட்ட மொத்தத்தையும் இழந்த வெற்றிமாறன்.. பாலாவை போல் தூக்கி எறிந்த சூர்யா
அதிலும் இந்த படத்தில் அரசியல் அதிகாரம் இல்லாத சமூக நீதி மக்களுக்கு பலனை தராது என்ற அம்பேத்கரின் கூற்றை தான் பராசக்தி படத்தின் மூலம் பறைசாற்றி இருப்பார்கள். இதில் சிவாஜி கணேசனின் நடிப்பு அல்டிமேட் ஆக இருக்கும்.
ஆகையால் 70 வருடங்களாக தமிழ் சினிமாவால் போற்றப்படும் பராசக்தி படத்தின் 70-ம் ஆண்டின் நிறைவைத் தொடர்ந்து நடந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறனின் இன்ஸ்பிரேஷனும் பராசக்தி தான் என்று வெளிப்படையாக பெருமையுடன் பேசி இருக்கிறார். இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களால் பெரிதும் பேசப்படும் பொருளாக மாறி உள்ளது.
Also Read: எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்பே சினிமாவை ஆட்சி செய்த 2 ஜாம்பவான்கள்.. 70-களில் கலக்கிய சூப்பர் ஹீரோஸ்