வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எம்ஜிஆர், சிவாஜி விளையாட்டு வீரர்களாக நடித்த ஒரே படம்.. பிகிலுக்கு டப் கொடுத்த நடிகர் திலகம்

அந்த காலகட்ட சினிமாவில் சென்டிமென்ட் உட்பட அனைத்து விதமான கதைகளையும் மக்கள் ஆர்வத்துடன் ரசித்தனர். அதிலும் விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்களும் அப்போது வெளிவந்தது. அது போன்ற படங்களுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர்.

அந்த வகையில் மிகப் பெரும் ஜாம்பவான்களான எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார்கள். அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு கிடைத்தது. அந்த திரைப்படங்கள் என்ன என்பதை பற்றி இங்கு காண்போம்.

Also read:சிவாஜி நடித்ததிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான ஒரே திரைப்படம்.. பல கோடிகளை குவித்து செய்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை!

நாம் 1953 ஆம் ஆண்டு காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் கதையை கலைஞர் கருணாநிதி எழுதி இருந்தார். எம்ஜிஆர் மற்றும் ஜானகி நடித்திருந்த இந்த திரைப்படம் குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

அதில் எம்ஜிஆர் பாக்ஸராக நடித்திருப்பார். அவருடைய நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும் இப்படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. மேலும் இந்த படத்திற்கு பிறகு எம்ஜிஆர், ஜானகியை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Also read:எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம்.. பாக்ஸ் ஆபீஸில் கோடிகளை குவித்து சாதனை

பொம்மை கல்யாணம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தை ஆர் எம் கிருஷ்ணசாமி இயக்கியிருந்தார். சிவாஜி கணேசன், ஜமுனா உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்தில் சிவாஜி கால்பந்தாட்ட வீரராக நடித்திருப்பார்.

இப்போதைய காலகட்டத்தில் பிகில், இறுதிச்சுற்று போன்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட கதைகள் அதிக அளவில் வெளியாகி வெற்றி பெறுகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் இது போன்ற திரைப்படங்கள் மிகவும் அரிதாகத்தான் வெளிவந்தது. அதை ரசிகர்களும் ரசிக்கவே செய்தனர்.

Also read:எம்ஜிஆர் எச்சரித்தும் கேட்காத 4 நடிகர்கள்.. கோபப்பட்டு ஒதுக்கி வைத்த ஹீரோ

Trending News