செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

லோகேஷால் ரீ என்ட்ரி-யில் பட்டையை கிளப்பும் நடிகர்.. இப்பவும் அழ வைக்கும் நேசமணியின் கையால்

Lokesh Gave Chance: பொதுவாக லோகேஷ் எடுக்கக்கூடிய படங்கள் அனைத்திலும் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு திறமையான நடிகர்களை தேர்ந்தெடுத்து அதில் நடிக்க வைத்து மக்களிடத்தில் வெற்றி பெற செய்வார். அந்த வகையில் லோகேஷ் பழைய நடிகர்களின் திறமையை பார்த்து அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் விதமாக ஒவ்வொருவரையும் கொண்டு வருகிறார்.

அப்படித்தான் 90களில் வில்லனாக வந்த மன்சூர் அலிகானை லியோ படத்தில் மறுபடியும் கொண்டு வந்தார். அதேபோல லோகேஷ் முதன்முதலாக இயக்கிய மாநகரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகரான சார்லிக்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு முன் வரை சார்லி காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து மக்களிடத்தில் பிரபலமாக இருந்தார்.

ஆனாலும் இடைப்பட்ட காலத்தில் சார்லி எங்கே இருக்கிறார் என்று தெரியாது அளவிற்கு சினிமாவை விட்டு வெகு தூரமாக விலகி இருந்தார். அப்படிப்பட்ட இவரின் திறமையை லோகேஷ் உணர்ந்ததால் மாநகரம் படத்தில் டாக்ஸி ஓட்டுனர் டிரைவராக வாய்ப்பு கொடுத்தார். சார்லியும் அவருக்கு கிடைத்த கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக நடித்துக் கொடுத்தார்.

Also read: லோகேஷ், அனிருத்துக்கு வலை விரிக்கும் நடிகர்.. தும்பை விட்டு வாலை பிடிக்கும் சாக்லேட் பாய்

அதன் மூலம் மறுபடியும் ரீ என்டரியாக வேலைக்காரன், கொன்றால் பாவம், உடன்பால், ஜோ போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரால் எந்த அளவிற்கு சிரிக்க வைக்க முடியுமோ அதே மாதிரி குணச்சித்திர நடிகராகவும் செமையாக நடித்து அழவும் வைப்பார். முக்கியமாக வடிவேலுடன் இணைந்து நடித்த காட்சிகள் அனைத்தும் அற்புதமாக இருக்கும்.

இன்னும் சொல்ல போனால் பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் காண்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரத்துக்கு அடியாளாக சார்லி நடித்து வடிவேலுவை பாடா படுத்தி எடுத்திருப்பார். அப்படிப்பட்ட இவரை மறுபடியும் திரையில் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து இது போல இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.  அதுவும் சீரியஸான கேரக்டர்கள் இவரை தேடி வருகிறது.

Also read: பெயர் கூட தெரியாமல் சப்போர்ட் கேரக்டரில் பின்னும் 6 நடிகர்கள்.. அந்த நடிகரை விட்டுக் கொடுக்காத லோகேஷ்

Trending News