வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்க்கு வந்த வாய்ப்பு, தன் மகனுக்காக தட்டி பறித்த தயாரிப்பாளர்.. கூட்டு சேர்ந்து காலை வாரிய எஸ்ஏசி

Actor Vijay and SAC: இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடங்கும் போது முன்னணியில் இருக்கும் நடிகர்களை நடிக்க வைத்தால் அந்த படம் ஹிட்டாகிவிடும், அத்துடன் தனக்கும் பேரும், புகழும் வந்துவிடும் என்று பலரும் ஆசையுடன் செயல்படுவார்கள். அப்படித்தான் உதவி இயக்குனராக இருந்த ரவி மரியா முதல் முறையாக இயக்குனராக அடி எடுத்து வைக்கும் போது விஜய்யை வைத்து எடுத்தால் நல்லா இருக்கும் என்று அவரை தேடி போயிருக்கிறார்.

அந்த நேரத்தில் விஜய்யிடம் இரட்டை கதாநாயகர்கள் வைத்து ஒரு சூப்பரான கதையை சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் எடுக்க முடியாமல் போய்விட்டது. அதனால் வேறு ஒரு கதையை சொல்லி விஜய்யிடம் சம்மதம் வாங்கி இருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் விஜய், மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இவரை கொஞ்சம் காக்க வைத்தார்.

Also read: விஜய்யை வீழ்த்த சன் பிக்சர்ஸ் எடுத்த அஸ்திரம்.. பெருந்தலைகள் பிரச்சனையில் சிக்கிய கிரிமினல் மைண்ட்

அப்பொழுது அந்த இயக்குனர் விஜய்யின் அப்பாவை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அவருக்கும் இந்த கதை ரொம்பவே பிடித்து போய் இருக்கிறது. உடனே அந்த இயக்குனரிடம் இந்த கதையை கொண்டு ஆர் பி சௌத்திரியை போய் பாருங்கள் என்று கூறி இருக்கிறார். அவரும் ரொம்பவே ஆர்வமாக தயாரிப்பாளர் ஆர்பி சௌத்திரியை சந்தித்து கதையே சொல்லி இருக்கிறார்.

அடுத்ததாக தயாரிப்பாளர் இந்த கதை எனக்கு பிடித்து போய் இருக்கிறது. அதனால் நான் விஜய் அப்பாவிடம் மற்ற விஷயங்களை பேசிக்கொள்கிறேன். நீங்கள் என் மகன் ஜீவாவை வைத்து இந்த கதையை எடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். உடனே அந்த இயக்குனரும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

Also read: தளபதி 68ல் விஜய் தங்கச்சியாக சாய்சில் இருக்கும் 4 நடிகைகள்.. கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் சீக்ரெட்ஸ்

இதனை அடுத்து விஜய்யின் அப்பாவிடம் தயாரிப்பாளர் பேசிய பொழுது என் மகன் ஜீவாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற கதையாக இது இருக்கிறது அதனால் என் பையன் நடிக்கட்டும் என்று சொல்லி இருக்கிறார். உடனே அவரும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஓகே என்று கூறியிருக்கிறார்.

அப்படி ரவி மரியா இயக்கத்தில் ஆர்பி சௌத்திரி தயாரிப்பில் ஜீவா முதல் முறையாக நடித்து வெளிவந்த படம் தான் ஆசை ஆசையாய். இந்த படத்தை பார்த்து விஜய்க்கு ரொம்பவே பிடித்து விட்டது. இதில் நடிக்க முடியவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டு இருந்திருக்கிறார். விஜய்க்கு வந்த நல்ல கதையை அசால்ட்டாக தட்டிவிட்ட அப்பாவின் மீது இன்னமும் வருத்தத்தில் தான் இருக்கிறாராம்.

Also read: விஜய், லைக்காவிடமிருந்து ஒதுங்கி இருப்பதன் பின்னணி.. பிரச்சனையில் சிக்கிய வரை காப்பாற்றிய அண்ணன்

Trending News