சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மக்கள் நீதி மையத்தை அப்படியே காப்பியடிக்கும் எதிர்க்கட்சி.. அதிருப்தியில் தொண்டர்கள்!

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக, அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட திட்டத்தை ஒத்திருந்ததால், கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனென்றால் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, ஒரு கோடி பேர் வறுமை கோட்டிற்கு மேல் கொண்டு வருவோம், டிஜிட்டல் தற்சார்பு கிராமங்கள் ஆகிய அனைத்துமே ஏற்கனவே கமலஹாசன் தனது பிரச்சாரத்தின் மூலம் அறிவித்ததை,

தற்போது ஸ்டாலின் தன்னுடைய அறிவிப்பு போலவே வெளியிட்டு இருப்பது கட்சிக்குள்ளே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே திமுகவின் இந்த செயலுக்கு கமலஹாசன், தனது ட்விட்டர் பதிவில்

‘எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களை பிரதி எடுத்துக் கொண்ட கழகம், எங்களை நேர்மையுடன் கை கொடுத்தால் மகிழ்வோம். என்று அவருடைய பாணியில் ட்விட் செய்துள்ளார்.

இதனால் திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயல்பாடுகளை அப்படியே காப்பி அடித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Trending News