புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஓசி சாப்பாட்டுக்கு ஓடோடி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. முட்டி மோதிக் கொள்ளும் மீனா, ஐஸ்வர்யா

விஜய் டிவியில் கூட்டுக்குடும்பம் மகத்துவத்தை சொல்லும்விதமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் தற்போது கதிர் ஹோட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். அப்போது தன் குடும்பத்தின் வருகைக்காக கதிர் காத்துக்கொண்டிருக்கிறார்.

முதலாவதாக மூர்த்தி ஹோட்டலுக்கு முன் உள்ள மரத்தடியில் மறைந்து கொண்ட ஒரு குழந்தையிடம் சாப்பாட்டை வாங்கிவரச் சொல்லி பணத்தை கொடுத்து விடுகிறார். முதல் போனியே அண்ணன் கையால் என தெரிந்தவுடன் கதிர் ஆனந்தத்தில் இரண்டு, மூன்று பொட்டலங்களை சேர்த்து வைத்து கொடுத்து விடுகிறார்.

அடுத்ததாக கண்ணன் வந்து வாழ்த்தி ஹோட்டலில் சாப்பிடுகிறார். அப்போது யாருக்கும் தெரியாமல் தனம் கதிரின் கடைக்கு வந்த பரிசுப் பொருட்களை கொடுக்கிறார். மேலும் முல்லை, கதிர் இருவரும் தனத்திடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர்.

தனம் சென்றபிறகு அடுத்ததாக ஐஸ்வர்யா மற்றும் அவரது சித்தி கஸ்தூரி இருவரும் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுகின்றனர். அப்போது யாருக்கும் தெரியாமல் மீனா பயந்து கொண்டு கதிர் ஹோட்டலுக்கு வருகிறார். உடனே கதிர் மீனாவை அழைத்துக்கொண்டு ஹோட்டல் உள்ளே வருகிறார்.

மீனாவின் குரலைக் கேட்டவுடன் ஐஸ்வர்யா மற்றும் கஸ்தூரி இருவரும் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வர முற்படுகின்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா மீனாவின் மீது இடித்து விடுகிறார். உடனே இருவரும் ஒருவருக்கு ஒருவர் முகத்தை பார்த்து ஆச்சரியம் அடைகின்றனர்.

இவ்வாறு வீட்டிற்கு தெரியாதவாறு ஒவ்வொருவரும் கதிரின் ஹோட்டலுக்கு ஓசி சாப்பாடு சாப்பிட வந்துள்ளனர். மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த சீனை ஏற்கனவே சூரியவம்சம் மற்றும் நீ வருவாயா போன்ற படத்தில் பார்த்தாச்சு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News