வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

யார் கண்ணு பட்டதோ.. சுக்கு நூறாக நொறுங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் என்றாலே கூட்டுக் குடும்பம் மற்றும் ஒற்றுமை தான் என்று இருந்த நிலையில் இப்பொழுது தனித்தனியாக குடித்தனம் செய்து வருகிறார்கள். இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணமே கண்மூடித்தனமான நம்பிக்கை தான். ஜீவா மற்றும் மீனாவை தொடர்ந்து இப்பொழுது கண்ணன் ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு போய்விட்டார்கள்.

இந்த பிரச்சனை எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டதே கண்ணன் தான். ஆனால் அவன் என்னமோ ரொம்ப நல்லவன் மாதிரி ஓவரா சீன் போட்டு தனம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பொண்டாட்டி பின்னாடியே போய்விட்டான். இதற்கு காரணம் அவங்க கையில் பேங்க் மேனேஜர் சம்பளம் இருப்பதால் ஓவராக ஆட்டம் போட்டு இருக்கிறார்கள். கொஞ்ச நாளைக்கு இந்த வேலை இல்லாமல் இருந்தால் தான் அவர்களுக்கு கூட்டு குடும்பத்துடன் அருமை புரியும்.

Also read: ரஞ்சித்தை பார்த்து காண்டாகிய கோபி.. மனதிற்குள்ளே புலம்பித் தவித்த நிலைமை

அடுத்ததாக ஜீவா, மீனா வீட்டில் இருந்து தனியாக பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். பின்பு மீனா இவரிடம் வந்து ஆறுதலாக பேசுகிறார். நீ கொஞ்சம் அவசரப்பட்டு இருக்க வேண்டாம். இந்த அளவுக்கு நீ ரியாக்ஷனும் கொடுத்திருக்க வேண்டாம். அந்த மொய் லிஸ்ட்டை பார்த்த பிறகு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு உன்கிட்ட வந்து கோபத்தை காட்டி விட்டேன். நீயும் அதை எல்லாரும் முன்னாடியும் அவங்ககிட்ட இந்த அளவுக்கு பேசியிருக்க வேண்டாம் என்று சொல்கிறார்.

உடனே ஜீவா நீயும் என்ன புரிஞ்சிக்கிடலையா என்று கேட்கிறார். அதற்கு மீனா நீ எந்த மனநிலையில் இருந்து பேசி இருக்கிறாய், எதற்காக பேசியிருக்கிறாய் என்று எனக்குப் புரிகிறது. ஆனாலும் கொஞ்சம் நீ பொறுமையாக இருந்திருக்கலாம் என்று எனக்கு தோணுகிறது என்று சொல்கிறார். ஆனால் ஜீவா இத்தனை நாள் நான் அப்படித்தான் இருந்தேன். நான் என் அண்ணன் எனக்கு எது செஞ்சாலும் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி இருந்தேன்.

Also read: எஸ் கே ஆரின் தம்பி மூலம் காய் நகர்த்தும் அப்பத்தா.. குணசேகரனை பழிவாங்க நினைக்கும் அரசு

ஆனால் என்னை இந்த அளவுக்கு அவமானப்படுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி ரொம்பவே அழுது கொண்டிருக்கிறார். அதற்கு மீனா நீ எதையும் நினைத்து கவலைப்படாதே உன் கூட நான் இருக்கிறேன் என்று கூறுகிறார். ஆனால் இதற்கெல்லாம் காரணம் கண்ணனாகத் தான் இருக்கும் மற்றவர்கள் மேல் எந்த தப்பும் இருக்காது என்று மீனா கூறுகிறார்.

அடுத்ததாக மீனா நம்ம குடும்பம் பிரிந்த மாதிரி ஆகிட்டு என்று கவலைப்படுகிறார். அதற்கு ஜீவா இவ்வளவு நாள் ஒற்றுமையாக தானே இருந்தோம் போதும் என்று கூறுகிறார். இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மீனாவின் அம்மா, ஜனார்த்தனிடம் போய் சொல்லப் போகிறார். அவரும் இவர்கள் வீட்டோடயே இருக்க வேண்டும் என்பதற்காக சூப்பர் மார்க்கெட்டை அவர் பெயரில் எழுதி வைக்கப் போகிறார்.

அடுத்ததாக ஐஸ்வர்யா மற்றும் கண்ணன், அத்தாச்சி வீட்டிற்கு போய் அவங்க வீட்டு சாவியை சண்டை போட்டு வாங்கி குடித்தனம் செய்கிறார்கள். பின்பு கதிர், வீட்டில் இருக்கும் அண்ணன், அண்ணி, முல்லைக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்து சாப்பிட சொல்கிறார். ஆனால் மூர்த்தி, கதிரிடம் கோபத்தைக் காட்டி இது உன் வீடு தானே நானும் தனமும் இந்த வீட்டை விட்டு போகிறோம் என்று விரக்தியில் பேசுகிறார். அதற்கு கதிர் மற்றும் முல்லை இப்படியெல்லாம் பேசாதீர்கள். இது உங்கள் வீடு நம்ம எல்லாரும் சேர்ந்து இருப்போம் என்று கூறுகிறார்.

Also read: சுந்தரி, கண்ணம்மா நடித்துள்ள N4 படம் எப்படி?. அனல் பறக்கும் விமர்சனம் இதோ!

Trending News