செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சிக்கலான பிரசவத்தை சந்திக்கும் தனம்.. பாண்டியன் ஸ்டோர்ஸில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தனத்தின் பிரசவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதாவது தனத்திற்கு இருக்கும் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கு குழந்தையை உடனடியாக வெளியில் எடுக்க வேண்டும். ஆனால் திடீரென்று தனத்திற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் மூர்த்தி இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் மீனா மற்றும் முல்லை ஏதோ திட்டமிட்டு ஒரு வழியாக சம்மதம் பெறுகிறார்கள்.

Also Read : என்னப்பா தனத்துக்கு நடிக்க தெரியலையா.. ரணகளத்திலும் கிளுகிளுப்புடன் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

அதன்பிறகு தனத்திற்கு ஆபரேஷன் செய்யப்பட்ட நல்லபடியாக குழந்தை பிறக்கிறது. அப்போது குழந்தையின் குரல் கேட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் முதலில் தனம் மற்றும் மூர்த்தி தம்பதியினருக்கு பாண்டியன் என்ற குழந்தை உள்ள நிலையில் இப்போது பெண் குழந்தையாக பாண்டியம்மா பிறந்து இருக்கிறார்.

இப்போதுதான் சமீபத்தில் முல்லை மற்றும் ஐஸ்வர்யாவுக்கு அடுத்துஅடுத்து பெண் குழந்தை பிறந்தது. தற்போது அடுத்த வாரிசும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு வந்துவிட்டது. மேலும் குழந்தை நல்லபடியாக இருக்கிறதா என்று மீனா மற்றும் முல்லை இடம் தனம் விசாரிக்கிறார். குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

Also Read : பிழைப்புக்காக எதிர்நீச்சல் சீரியலை அண்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. இறுதிக்கட்டத்தால் எடுத்த முடிவு

நல்லபடியாக இருக்கிறது, இதற்கு போய் பயந்தீர்களா என முல்லை கேட்கிறார். இவ்வாறு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்ததாக தனத்திற்கு இருக்கும் பிரச்சனை தெரிய வந்தவுடன் பிரளயமே வெடிக்க இருக்கிறது. அதிலிருந்தும் கண்டிப்பாக தனம் வெளியே வந்து விடுவார்.

ஆகையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள நான்கு அண்ணன் தம்பிகளும் வாரிசு மற்றும் சொத்து, செல்வாக்கு என கொடிகட்டி பறக்க இருக்கின்றனர். ஆகையால் விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு இயக்குனர் பூசணிக்காய் உடைக்கும் நேரம் வந்துவிட்டது. இதைத்தொடர்ந்து புதிய குடும்பத்தொடர் ஒன்றை ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.

Also Read : இறுதிக்கட்டத்தை நெருங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. முல்லையால் ஏற்பட போகும் விடிவுகாலம்

Trending News