Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி தூங்கிக் கொண்டிருக்கும் போது கோமதியின் புடவையை வைத்து அரசி கையை கட்டி விடுகிறார். இதை பார்த்த கதிரிடம், அவளை ரொம்ப அடித்து துன்புறுத்தி விட்டேன். அதனால் தவறாக ஏதாவது ஒரு முடிவு எடுத்து விடுவாளோ என்ற பயம்தான் எனக்கு அதிகமாக இருக்கிறது.
அதனால் அரசியை கரைசேர்க்கும் வரை எனக்கு தூக்கம் வராது என்று பீல் பண்ணி பேசுகிறார். அப்பொழுது கதிர் அழுது கொண்டே ரூமுக்கு வந்த நிலையில் ராஜி என்ன ஆச்சு என்று கேட்டு கதிரை சமாதானப்படுத்தும் விதமாக ஆறுதலுடன் பேசுகிறார். அடுத்ததாக சுகன்யா பழனிவேலு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பழனிவேலு குறட்டை விடுகிறார் என்ற காரணத்திற்காக சுகன்யா, பழனிவேலுவை எழுப்பி வழக்கம் போல் திட்டி ரூமை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.
உடனே பழனிவேலு ஹாலில் தூங்கி விடுகிறார். மறுநாள் சுகன்யா எழுந்து வரும் பொழுது, ஹாலில் தூங்கிக் கொண்டிருக்கும் பழனிவேலுவை பார்த்தால் நம்மளை தவறாக நினைத்து விடுவார்கள் என்பதால் பழனிவேலுவை திட்டி எழுப்பி அராஜகம் பண்ணி வருகிறார். இதை ராஜியின் அம்மா பார்த்து விடுகிறார்.
அந்த சமயத்தில் அப்பத்தாவும் வந்த பொழுது சுகன்யா அப்படியே நல்ல மருமகள் என்பதற்கு ஏற்ப பழனிவேலுமிடம் அக்கரையாக பேச ஆரம்பித்து விட்டார். இதை பார்த்த ராஜி அம்மா, சுகன்யாவின் தில்லாலங்கடி வேலையை புரிந்து கொண்டு ரொம்ப பொல்லாதவர் என்பதை கண்டுபிடித்து விட்டார். ஆனாலும் எதையும் கேட்காமல் சைலண்டாக போய்விடுகிறார்.
அடுத்ததாக அரசிக்கு பாண்டியன் பார்த்த மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் கல்யாணம் வரை போகும். ஆனால் இதை நடக்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற சதியில் சுகன்யா சக்திவேல் மற்றும் குமரவேலு கூட்டணியில் அரசி சிக்கிக் கொண்டு குமரவேலுவை கல்யாணம் பண்ணி விடுவார். மறுபடியும் பாண்டியன் குடும்பம் சக்திவேலுடன் தோற்று போய் நிற்கப் போகிறது.