வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

செல்ஃபி சிவக்குமாரை இழுத்ததால் முடிவுக்கு வந்த பருத்திவீரன் சர்ச்சை! பிளேட்டை திருப்பி போட்ட சம்பவம்

Sivakumar – Paruthiveeran : கடந்த சில தினங்களாகவே மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் விஷயம் தான் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையே ஆன பிரச்சனை. பருத்திவீரன் படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை அந்த பிரச்சனை முடியாமல் இழுத்தடித்துக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் ஞானவேல் ராஜா அமீரை பொது வழியில் தரைகுறைவாக பேசி இருந்தார். இதை எதிர்த்து சிவகுமார் குடும்பம் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாமல் இருந்தது. இதை அடுத்து சூர்யா மற்றும் கார்த்தியும் எதுவும் வாய் திறக்காமல் இருந்ததால் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது.

அதாவது சமுத்திரகனி, சசிகுமார் மற்றும் கரு பழனியப்பா போன்ற பிரபலங்கள் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தியை விமர்சிக்கும்படி பேசி இருந்தனர். இந்நிலையில் சூர்யா மற்றும் கார்த்தியின் மானம் காப்பாற்றப்படும் விதமாக ஞானவேல் ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்ட ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது சிவக்குமாரின் வற்புறுத்தலால் நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read : முத்தழகு இல்லன்னா இறுதி சுற்று மதி உருவாயிருக்க முடியாது.. அமீரை உச்சி குளிர வைத்த சுதா கொங்கரா

அதாவது கடந்த 17 ஆண்டுகளாக பருத்திவீரன் பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இது நாள் வரை இந்த விஷயம் குறித்த நான் பேசியது இல்லை. அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை கூப்பிட்டு வருகிறேன். அவர் என்னுடைய குடும்பத்துடனும் நெருங்கி பழகியவர் தான். ஆனால் சமீபத்தில் அமீர் தன் மீது சுமற்றிய குற்றச்சாட்டுகள் தன்னை காயப்படுத்தியது.

அதற்கு பதில் அளிக்கும் போது தான் சில மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி விட்டேன். அது அவருடைய மனதை காயப்படுத்து இருந்தால் மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு மேலும் பிரச்சனையை இழுத்தால் தனது பெயருக்கு களங்கம் வரும் என்று ஞானவேல் ராஜா சுதாகரித்துக் கொண்டு மன்னிப்பு மடலை வெளியிட்டு இருக்கிறார்.

முடிவுக்கு வந்த பருத்திவீரன் சர்ச்சை

gnanavelraja
gnanavelraja

Trending News